அமெரிக்கா: பாராட்டாத கணவன்- சோடாவில் பூச்சி மருந்தை கலந்த மனைவி

பிறந்தநாள் விழாவை பாராட்டாத கணவருக்கு சோடாவில் விஷம் கலந்து கொடுத்த மனைவி
மிச்செல் ஒய் பீட்டர்ஸ்
மிச்செல் ஒய் பீட்டர்ஸ் Google

பிறந்தநாள் விழாவை பாராட்டாத கணவருக்கு சோடாவில் விஷம் கலந்து கொடுத்த மனைவி

'கில்லர் சூப்' என்ற திரைப்படம் போன்று கணவனை கொலை செய்ய நினைத்த பெண் தனது கணவர் குடிக்கும் சோடாவில் விஷத்தை கலந்து வைத்துள்ளார். அதை குடித்த கணவன் உடல்நிலை பாதிக்கப்பட்டதோடு மனைவியின் செயலை கண்டுபிடித்து போலீஸிடம் மாட்டிவிட்ட சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் மிச்செல் ஒய் பீட்டர்ஸ். இவர் தனது கணவனின் ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக ஏற்பாடுகள் செய்திருந்த நிலையில் அதைப்பற்றி அவரது கணவர் பாராட்டு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் கொண்ட மிச்செல் ஒய் பீட்டர்ஸ் தனது கணவர் குடிக்கும் சோடாவில் விஷத்தை கலந்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ளார்.

பிறந்தநாள் அன்று கணவன் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து மனைவி கலந்து வைத்த சோடாவை எடுத்துக் குடித்துள்ளார். அதன் சுவையானது வழக்கத்திற்கு மாறாக இருந்துள்ளது. இருப்பினும் அதை குடித்தவருக்கு வயிற்று வலி, வாந்தி வந்துள்ளது. சில தினங்களில் அவருக்கு தொண்டை புண், வயிற்று போக்கும் ஏற்பட்டுள்ளது. இருமலின்போது மஞ்சள் சளியும் வந்துள்ளது.

சந்தேகம் கொண்டவர், சம்பவ தினத்தின் சிசிடிவி காட்சியை எடுத்து பார்த்துள்ளார். அவர் நினைத்ததுபோல, தனது மனைவி, குளிர்சாதனப் பெட்டியிலிருந்து ஒரு பூச்சிக்கொல்லி மருந்தையும், சோடா பாட்டிலையும் எடுத்து சென்றதும், பிறகு மீண்டும் அந்த பாட்டில்களை அதே இடத்தில் கொண்டு வைத்ததும் தெரிந்தது.

மிச்செல் ஒய் பீட்டர்ஸ்
’இன்னும் ஒரு வேலை இருக்கிறது..’ ஓய்வுபெற்ற விராட் கோலியிடம் இறுதியாக அறிவுரை கூறிய ராகுல் டிராவிட்!

இதையடுத்து கணவன் தனது மனைவியைப் பற்றி போலீஸில் புகாரளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிசிடிவியின் அடிப்படையில் பார்த்தப்போது, சோடாவில் பூச்சி மருந்து கலந்து இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, தனது கணவரை கொலைசெய்ய நினைத்த மிச்செல் ஒய் பீட்டர்ஸை கைது செய்தனர். கணவரை கொலை செய்ய நினைத்ததற்கான காரணத்தை போலீசார், மிச்செல்லிடம் கேட்டபோது, கணவனின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக கணவன் தன்னை பாராட்டவில்லை என்றும் ஆகையால் கோபத்தில் கணவனை கொலை செய்ய நினைத்ததாகக் கூறியுள்ளார்.

ஆனால் கணவரின் பெயரில் உள்ள காப்பீட்டுத் தொகையான 500000 அமெரிக்க டாலர்களை பெறுவதற்காக மனைவி இத்தகைய செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் கணவன் மனைவிக்கு இடையில் விவாகரத்து எண்ணம் உள்ளதா என்றும், பல்வேறு வகையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com