’இன்னும் ஒரு வேலை இருக்கிறது..’ ஓய்வுபெற்ற விராட் கோலியிடம் இறுதியாக அறிவுரை கூறிய ராகுல் டிராவிட்!

டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற விராட் கோலிக்கு, இன்னும் ஒரு வேலை மீதம் இருப்பதாக சுட்டிக்காட்டி அதனையும் சாதித்து விட வேண்டும் என்று அவருக்கு ராகுல் டிராவிட் அறிவுரை கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டிராவிட், கோலி
டிராவிட், கோலிஎக்ஸ் தளம்

நடப்பாண்டு டி20 உலகக்கோப்பையை இந்திய அணி மீண்டும் உச்சி முகர்ந்துள்ளது. இதை உலகம் முழுவதும் உள்ள இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையே இந்தத் தொடருடன் கேப்டன் ரோகித் சர்மா, ரன் மெஷின் விராட் கோலி, ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுள்ளனர். அதுபோல், தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டும் விடை பெற்றுள்ளார். அவர், கடந்த 3 ஆண்டுகளாக இந்திய அணிக்காக மிகச் சிறப்பான பணியை செய்து வந்த நிலையில், ஐசிசி கோப்பைகள் கையைவிட்டே போயின.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை ஆகியன இந்தியாவின் கையைவிட்டு நழுவிப்போனது. இதையடுத்து, ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் பதவி குறித்தும் விமர்சிக்கப்பட்டது. என்றாலும், டி20 உலகக்கோப்பை தொடர் முடியும் வரை ராகுல் டிராவிட்டே நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவரே அந்தப் பதவியில் நீடித்தார். தற்போது டி20 உலகக்கோப்பையை வென்றுகொடுத்த மகிழ்வில் விடை பெற்றுள்ளார்.

இதையும் படிக்க: அமெரிக்க அதிபர் தேர்தல்| ஜோ பைடனை மாற்றும் கட்சி? களமிறங்கும் ஒபாமா மனைவி!

டிராவிட், கோலி
ராகுல் டிராவிட் தலைமையின் கீழ் இந்திய கிரிக்கெட் அணி சாதித்தவை என்னென்ன தெரியுமா?

முன்னதாக வீரர்களின் ஓய்வறையில் டிராவிட் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற விராட் கோலிக்கு, இன்னும் ஒரு வேலை மீதம் இருப்பதாக சுட்டிக்காட்டி அதனையும் சாதித்து விட வேண்டும் என்று அவருக்கு ராகுல் டிராவிட் அறிவுரை கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அப்போது ராகுல் டிராவிட் கோலியிடம், “மூன்று வெள்ளை பந்து கோப்பைகளையும் முடித்துவிட்டீர்கள். இன்னும் ஒரு சிவப்பு மட்டுமே மீதம் உள்ளது. அதனையும் நிவர்த்தி செய்துவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

அதாவது வெள்ளைப் பந்துகளில் ஆடப்படும் 50 ஓவர் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று வகையான உலகக்கோப்பையை வென்ற அணியிலும் விராட் கோலி இடம்பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.

அதேபோன்று இன்னும் சிவப்பு பந்தில் விளையாடும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை மற்றும் அவர் கைப்பற்றவில்லை. அதனையும் முடிக்க வேண்டும் என்று ராகுல் டிராவிட் அறிவுரை வழங்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்க: சாம்பியனான இந்தியா... மகிழ்ச்சியில் வீடியோகால் செய்த ஹர்திக்! வதந்திகளுக்கு முற்றிப்புள்ளியா?

டிராவிட், கோலி
World Cup | அன்று காலில் வைத்த மிட்செல் மார்ஷ்.. இன்று SKY செய்த தரமான சம்பவம்! வைரலாகும் புகைப்படம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com