Why the Strait of Hormuz Is Crucial in the Global Energy Crisis
ஈரான் - ஹார்முஸ் நீரிணைஎக்ஸ் தளம்

உலகின் பல நாடுகளில் கடும் எரிசக்தி நெருக்கடி.. ஹார்முஸ் நீரிணை ஏன் முக்கியம்?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை ஈரான் தடுத்து வருகிறது.
Published on

வளைகுடா நாடுகளில் உற்பத்தியாகும் எண்ணெய் மற்றும் எரிவாயு உலகின் பிற நாடுகளுக்கு ஹார்முஸ் நீரிணை வழியாகத்தான் கொண்டு செல்லப்படுகிறது. இப்போது இந்த வழித்தடம் முடக்கப்பட்டுள்ளதால், உலகளாவிய ரீதியில் கடுமையான எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை ஈரான் தடுத்து வருகிறது. ஈரான் மற்றும் ஓமனுக்கு இடையே அமைந்துள்ள இந்தச் சிறிய நீர்வழிப்பாதை வழியாகத்தான் வளைகுடா நாடுகளில் உற்பத்தியாகும் எண்ணெய் மற்றும் எரிவாயு உலகின் பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இப்போது வழித்தடம் முடக்கப்பட்டுள்ளதால், உலகளாவிய ரீதியில் கடுமையான எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆசிய நாடுகள் பலவும் வளைகுடா நாடுகளிடமிருந்தே கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்கின்றன. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் ஓமன் மற்றும் பிற வளைகுடா நாடுகள் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தியா, தனது கச்சா எண்ணெய் தேவையில் ஈராக்கிடமிருந்து சுமார் 25 விழுக்காடு, சவுதி அரேபியாவிடமிருந்து 12 விழுக்காடு மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்து 8 விழுக்காடு இறக்குமதி செய்கிறது.

Why the Strait of Hormuz Is Crucial in the Global Energy Crisis
கச்சா எண்ணெய்புதிய தலைமுறை

சமையல் எரிவாயுவைப் பொறுத்தவரை தனது மொத்த தேவையில் கத்தாரிடமிருந்து 45 விழுக்காடு, ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்து 15 விழுக்காடு மற்றும் ஓமனிடமிருந்து 5 விழுக்காடும் இறக்குமதி செய்கிறது. பிலிப்பைன்ஸ், ஜப்பான், பாகிஸ்தான், சிங்கப்பூர், தென் கொரியா, தைவான், மலேசியா, சீனா ஆகிய ஆசிய நாடுகள் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்து கணிசமான அளவிலான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கின்றன. பாகிஸ்தான், வங்கதேசம், தைவான், சீனா, தாய்லாந்து, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கத்தாரும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனிலிருந்தும் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்கின்றன.

Why the Strait of Hormuz Is Crucial in the Global Energy Crisis
ஈரான்| ஹார்முஸ் நீரிணை என்றால் என்ன..? ஒரு முடிவால் ஆடிப்போன உலக நாடுகள்! என்ன விளைவுகள் ஏற்படும்..?
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com