\
Why Iran Faces Power Shortages Despite Vast Oil and Gas Reserves
கோப்புபடம்Reuters

எரிபொருள் வளமிக்க ஈரான்.. இருளில் மூழ்கும் அபாயம்.. மின் பற்றாக்குறைக்கு காரணம் என்ன?

உலகின் 3-வது மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்பையும், 2-வது பெரிய இயற்கை எரிவாயு இருப்பையும் ஈரான் கொண்டுள்ளது.
Published on: 

உலகின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றான ஈரான், தற்போது கடுமையான மின்சாரப் பற்றாக்குறையைச் சந்தித்து வருகிறது. நாட்டின் எரிபொருள் விநியோக நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, ஒரு நாளுக்கு 2 மணி நேரம் வரை மின் தடை ஏற்படும் என அந்நாட்டின் தேசிய மின்சார நிறுவனத்தின் தலைவர் முகம்மது அல்லாதாத் (Mohammad Allahdad) தெரிவித்திருக்கிறார். எரிபொருள் வளங்கள் ஏராளமாக இருந்தும், ஈரானின் மின்சாரப்பற்றாக்குறைக்கு காரணம் என்ன? என்பது குறித்துப் பார்க்கலாம்.

Reuters

உலகின் 3-வது மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்பையும், 2-வது பெரிய இயற்கை எரிவாயு இருப்பையும் ஈரான் கொண்டுள்ளது. ஆனால், அந்நாட்டில், கடந்த நவம்பர் 22-ம் தேதி முதல் ஈரானில் மின்சார விநியோகக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதற்கு முக்கியமான காரணம் இயற்கை எரிவாயு பற்றாக்குறை எனக் கூறப்படுகிறது.

Why Iran Faces Power Shortages Despite Vast Oil and Gas Reserves
6 நாளில் மொத்தமாக மாறிய இயற்கை : வரலாற்றில் முதல்முறை என ஆய்வாளர்கள் அதிர்ச்சி.. பாதிப்புகள் என்ன?

கடந்த பிப்ரவரி மாதம் முதல், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் எரிசக்திக் கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, நான்கு எரிவாயு பதப்படுத்தும் நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டில் எரிவாயு உற்பத்தித் திறனும் குறைந்துள்ளது. மேலும், இந்தப்போர் ஈரானை 1980-களுக்குப் பிறகு இல்லாத மிகக் கடுமையான பொருளாதாரச் சரிவுக்குத் தள்ளியுள்ளது எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

War
WarReuters

அதேசமயம், போர்தான் இதற்குக் காரணம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. பல ஆண்டுகளாக அமலில் இருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத் தடைகள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் முதலீடுகளைப் பெறுவதில் தடைகள் ஆகியவை முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. மேலும், பழைய மின் உற்பத்தி நிலையங்கள், முறையான பராமரிப்பின்மை, மானிய விலையில் கிடைக்கும் மின்சாரத்தால் அதிகரிக்கும் நுகர்வு, நிர்வாகச் சிக்கல்கள் எனப் பல காரணங்களும் இந்த நெருக்கடிக்குப் பின்னால் இருக்கின்றன.

மேலும், ஈரானின் மொத்த மின்சார உற்பத்தியில் சுமார் 73 சதவீதம் இயற்கை எரிவாயுவைச் சார்ந்தே இருக்கிறது. குளிர்காலம் நெருங்குவதால் வீடுகளில் வெப்பமூட்டுவதற்கான எரிவாயு தேவை அதிகரிக்கிறது. இதனால் மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான எரிவாயுவை வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுவும், மின்பற்றாக்குறைக்கு மிக முக்கியக் காரணங்களில் ஒன்றாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தச்சூழலில் தான், ஈரான் அரசு மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து, அந்நாட்டின் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன், எரிபொருள் பற்றாக்குறையால் குளிர்காலம் மிகவும் கடினமாக இருக்கும் என எச்சரித்துள்ளார்.

இவ்வாறு, இயற்கை வளங்கள் அதிகம் இருந்தாலும், போர் மற்றும் பொருளாதாரத்தடைகளால் மின்வெட்டை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு ஈரான் தற்போது சென்றிருக்கிறது.

Why Iran Faces Power Shortages Despite Vast Oil and Gas Reserves
மேகக் கடலில் மிதக்கும் கிறிஸ்து சிலை! AI வீடியோவா? இயற்கையின் அதிசயமா?