Why Donald Trump Backed Away from War with Iran
US - IranPT

அடிமேல் அடி.. ஈரான் போரில் முதலில் பின்வாங்கிய ட்ரம்ப்.. பின்னணிக் காரணம் என்ன?

ஈரானின் அணுசக்தித் திறன்கள் தம்முடைய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் என இஸ்ரேல் தூண்டிவிட்டதன் பேரிலேயே அமெரிக்காவும் இந்தப் போரில் நுழைந்தது. இதனால், அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக உள்நாட்டிலேயே எதிர்ப்பு வலுத்து வருகிறது.
Published on

ஒரு மாதமாக நடைபெற்ற இந்தப் போரில் தாம் வெற்றிபெற்றிருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. அந்த மகிழ்ச்சியையும் அவர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேநேரத்தில், இந்தப் போரில் முதலில் அமெரிக்காவே பின்வாங்கியதாகக் கூறப்படுகிறது.

தற்காலிக போர் நிறுத்தம் - ஈரான் 10 அம்ச கோரிக்கை

மத்திய கிழக்கில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையேயான போர், தற்போது பாகிஸ்தானின் மத்தியஸ்த்திற்குப் பிறகு 2 வார காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் போர் நிறுத்தம் தொடர்பாக ஈரான் விடுத்துள்ள ஹார்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும்; 1979 முதல் ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை நீக்க வேண்டும்; வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துகளை விடுவிக்க வேண்டும்; அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்கா முழு இழப்பீடு வழங்க வேண்டும்; லெபனான் - காசா - ஏமன் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்; வளைகுடா நாடுகளில் உள்ள அனைத்து அமெரிக்க ராணுவத் தளவாடங்களையும் திரும்பப் பெற வேண்டும்; ஐ.நா. பாதுகாப்பு சபையில் அனைத்து விவகாரங்களுக்கும் ஒப்புதல் அளிக்க வேண்டும்; சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) ஆளுநர் குழுவின் அனைத்துத் தீர்மானங்களையும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை ஈரான் முன்வைத்துள்ளது. இந்த 10 அம்ச கோரிக்கைகளையும் அமெரிக்கா பரிசீலிக்கும் எனத் தெரிகிறது.

ட்ரம்ப் - மொஜ்தபா காமேனி
ட்ரம்ப் - மொஜ்தபா காமேனிPt web

இந்த நிலையில், ஒரு மாதமாக நடைபெற்ற இந்தப் போரில் தாம் வெற்றிபெற்றிருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. அந்த மகிழ்ச்சியையும் அவர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேநேரத்தில், இந்தப் போரில் முதலில் அமெரிக்காவே பின்வாங்கியதாகக் கூறப்படுகிறது.

Why Donald Trump Backed Away from War with Iran
’இனிதான் ஆரம்பம்..’ பாப் அல்-மண்டேப்பை மூடும் ஈரான்? பேராபத்தைச் சந்திக்கும் உலக நாடுகள்?

போரைத் தூண்டிவிட்ட இஸ்ரேல் - ட்ரம்புக்கு எதிராக போராட்டம்

ஒரே இரவில் ஒட்டுமொத்த ஈரானையும் அழித்துவிடுவதாகச் சவால்விட்ட ட்ரம்ப், ஏன் திடீரென அதிலிருந்து பின்வாங்கியுள்ளார். இதில் இருக்கும் பின்னணிக் காரணம் என்ன? அமெரிக்க ராணுவத்தின் உச்ச தளபதியிடம் காணப்பட்ட விரக்தியே இதன் காரணம் என்கிறார்கள் வல்லுநர்கள். அமெரிக்காவைப் பொறுத்தவரை குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சியினர் என இருதரப்பிலும் இந்தப் போர் தேவையற்றது என்கிற சூழல் நிலவுகிறது. ஈரானின் அணுசக்தித் திறன்கள் தம்முடைய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் என இஸ்ரேல் தூண்டிவிட்டதன் பேரிலேயே அமெரிக்காவும் இந்தப் போரில் நுழைந்தது. இதனால், அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக உள்நாட்டிலேயே எதிர்ப்பு வலுத்து வருகிறது.

மக்கள் விரும்பாத ஒரு போருக்காக ட்ரம்ப் மீது அதிருப்தி ஏற்பட்டு அமெரிக்கர்கள் வீதிகளில் போராட ஆரம்பித்தனர். குறிப்பாக, மார்ச் மாத இறுதியில் நடைபெற்ற 'நோ கிங்ஸ் 3.0' போராட்டத்தில், அதாவது 3,300-க்கும் மேற்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வுகளில் நாடு முழுவதிலுமிருந்து மொத்தமாக சுமார் எட்டு முதல் ஒன்பது மில்லியன் போராட்டக்காரர்கள் கலந்துகொண்டனர். இது அமெரிக்க வரலாற்றில் ஒரே நாளில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டமாகும்.

Why Donald Trump Backed Away from War with Iran
சுட்டு வீழ்த்தப்பட்ட 2 விமானம்.. 2 ஹெலிகாப்டர்.. ஒரே நாளில் அமெரிக்காவிற்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான்!

ஈரான் போரில் அமெரிக்காவுக்கு நஷ்டம்

இன்னொரு புறம், இன்னும் ஆறு மாதங்களில் அமெரிக்காவில் பல இடைக்காலத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. ஏற்கெனவே ட்ரம்பின் அதிரடி நடவடிக்கைகளால் அமெரிக்கர்கள் வெறுப்பில் இருக்கும் நிலையில், ஈரான் மீதான தேவையற்ற தாக்குதலும் குடியரசுக் கட்சியினருக்குச் சாதகமில்லாமல் போகலாம். அடுத்து, ட்ரம்பின் வரிவிதிப்புகள் அமெரிக்கர்களை மட்டுமல்லாது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், இஸ்ரேலின் தூண்டுதலின் பேரில் அமெரிக்கா நடத்திவரும் ஒரு போரினால், உலகப் பொருளாதாரம் மீண்டும் ஒரு பெரும் பேரழிவை நோக்கித் தள்ளியது. இது, அமெரிக்காவுக்கும் வீழ்ச்சியைத் தந்தது. அடுத்து, உலகளாவிய எரிசக்தி விநியோகத்திலும் அமெரிக்காவுக்குப் பின்னடைவே ஏற்பட்டது. தவிர, ராணுவக் கட்டமைப்பிலும் பின்னடைவைச் சந்தித்தது.

us pentagon
us pentagonx page

குறிப்பாக, அதன் ராணுவக் கட்டமைப்பில் செலவுகள் வேகமாக அதிகரித்தன. 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி'யின் முதல் ஆறு நாட்களில் மட்டும், நேரடி இராணுவச் செலவினம் 11.3 பில்லியன் டாலராக இருக்கும் என பென்டகன் மதிப்பிட்டது. அது அடுத்த 12-ஆவது நாளுக்குள், சுமார் 16.5 பில்லியன் டாலராக மாறியது. அதன்பிறகு தினசரிச் செலவு சராசரியாக 500 முதல் 900 மில்லியன் டாலராக இருந்தது. ஏப்ரல் மாதத் தொடக்கம் வரையிலான சுமார் ஐந்து வார காலத்திற்குள், ஒட்டுமொத்த நேரடிச் செலவுகள் 30–40 பில்லியன் டாலர்களைத் தாண்டின என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இதன் காரணமாகவே அவர், போரை இரண்டு வார காலத்திற்கு நிறுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Why Donald Trump Backed Away from War with Iran
‘பழச மறந்துடாதீங்க..’ அமெரிக்காவின் இறுதி எச்சரிக்கை.. உறுதியுடன் நிற்கும் ஈரான்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com