டெஸ்லா குழுவின் தலைவர்! எலான் மஸ்க்கே பாராட்டிய உலகின் கவனம்ஈர்த்த தமிழர்! யார்இந்த அசோக் எல்லுசாமி?

டெஸ்லா குழுவின் தலைவராக உயர்ந்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அசோக் எல்லுசாமியை எலான் மஸ்க் பாராட்டியுள்ளார்.
எலான் மஸ்க், அசோக் எல்லுசாமி
எலான் மஸ்க், அசோக் எல்லுசாமிஎக்ஸ் தளம்

உலகில் மின்சார கார் உற்பத்தியில், முன்னணி இருக்கும் நிறுவனங்களில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம், தன்னுடைய அடுத்தகட்டமாக ஓட்டுநர் இல்லாத, கணினி மூலம், அதாவது ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தானியங்கி முறையில் ஓடும் மின்சார கார்களையும் தயாரித்து வருகிறது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் ஆட்டோ பைலர் கார் தயாரிப்பு பிரிவின் தலைவரும் தமிழமான அசோக் எல்லுசாமி, சமீபத்தில் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில், ”2014இல் ஆட்டோ பைலட் கார் தயாரிப்பு திட்டம் மிக எளிய முறையில், 384 கே.பி மெமரி கொண்ட சிறிய கம்ப்யூட்டரை கொண்டு தொடங்கப்பட்டது. மேலும், சாத்தியமே இல்லை என்று கருதப்பட்ட விஷயங்களையும், செய்துகாட்ட, எலான் மஸ்க் தொடர்ந்து தங்களின் குழுவினருக்கு ஊக்கம் அளித்து, முழு சுதந்திரம் அளித்தார்” என அதில் பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவைப் பகிர்ந்திருக்கும் எலான் மஸ்க், ”அசோக் மற்றும் அவரின் குழுவினர் இல்லாவிட்டால், டெஸ்லா நிறுவனம் மற்றவர்களைப் போல் மிகச் சாதாரண கார் நிறுவனமாக தான் இருந்திருக்கும்” எனப் புகழ்ந்துள்ளார். இதன்மூலம் ஒரேநாளில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார், தமிழரான அசோக் எல்லுசாமி?

இதையும் படிக்க: தொடரும் சோகம்.. 45 வயதுப் பெண்ணை விழுங்கிய 16 அடி நீள மலைப்பாம்பு.. இந்தோனேசியாவில் அதிர்ச்சி!

எலான் மஸ்க், அசோக் எல்லுசாமி
எலான் மஸ்க்கின் இந்திய பயணம்.. திடீர் தள்ளிவைப்பு! இதுதான் காரணமா?

யார் இந்த அசோக் எல்லுசாமி?

தமிழ்நாட்டைச் சேர்ந்த அசோக் எல்லுசாமி கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். அதன்பின்னர் சென்னையில் WABCO வாகன கன்ட்ரோல் சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராகச் சுமார் 2.4 வருடம் பணியாற்றியுள்ளார். பணி அனுபவத்தைப் பெற்ற அசோக் எல்லுசாமி, இன்ஜினியரிங் படிப்புக்கு பெயர்போன அமெரிக்காவின் கார்கி மெலான் பல்கலைக்கழகத்தில் ரோபோட்டிக்ஸ் சிஸ்டம்ஸ் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

அதன்பின்பு வோக்ஸ்வேகன் கார் நிறுவனத்தின் எல்கட்ரிக் ஆராய்ச்சி மையத்தில் இவர் பணியாற்றியுள்ளார். அதைத் தொடர்ந்து WABCO நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். 2015-ஆம் ஆண்டு டெஸ்லா போட்ட ட்விட்டர் பதிவை தொடர்ந்து டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ குழுவில் இணைந்தார். அதில் இணைந்த முதல் நபர் அசோக் எல்லுச்சாமிதான் என எலான் மஸ்க்கே ஒருமுறை தெரிவித்திருந்தார். அதன்பின்னர் படிப்படியாக உயர்ந்து தற்போது அந்தக் குழுவின் தலைவராக உயர்ந்துள்ளார்.

இதையும் படிக்க: மணிப்பூர் | முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல்.. ஒருவர் காயம்!

எலான் மஸ்க், அசோக் எல்லுசாமி
மனித மூளைக்குள் மைக்ரோசிப் பொறுத்தி ஆராய்ச்சி! நரம்பியக்க நோயாளிகளை அழைக்கும் எலான் மஸ்க்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com