தொடரும் சோகம்.. 45 வயதுப் பெண்ணை விழுங்கிய 16 அடி நீள மலைப்பாம்பு.. இந்தோனேசியாவில் அதிர்ச்சி!

இந்தோனேசியாவில் 45 வயதுப் பெண்ணை 16 அடி நீள மலைப்பாம்பு ஒன்று விழுங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலைப்பாம்பு
மலைப்பாம்புஎக்ஸ் தளம்

மத்திய இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள கலேம்பாங் கிராமத்தைச் சேர்ந்தவர் ஃபரிதா. 45 வயதான இவர், தன் கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்துவந்தார். இந்த நிலையில், கடந்த ஜூன் 6-ஆம் தேதி இரவு ஃபரிதா, வீடு திரும்பாதை அடுத்து, அவரது கணவர் எங்கும் தேடியுள்ளார். இந்தச் செய்தி அந்தக் கிராமத்திலும் பரவியதால் அவருடன் இணைந்து மக்களும் தேடியுள்ளனர்.

இந்த நிலையில், ஃபரிதாவின் உடைமைகளை அவரது கணவர் நேற்று கண்டுபிடித்துள்ளார். இது, அவருக்கு சந்தேகத்தை அளித்ததைத் தொடர்ந்து ஊர் மக்கள் உதவியுடன் அந்த இடத்தைத் தொடர்ந்து தேடியுள்ளார். அப்போது, அவர்கள் பெரிய வயிற்றுடன் 16 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று படுத்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அதிகாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவருடைய பார்வையில் பாம்பின் வயிறு கிழித்துப் பார்க்கப்பட்டது. அதில் ஃபரிதா உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இதுபோன்ற சம்பவங்கள் சமீபகாலமாக நாட்டில் அதிகமாக நிகழ்வதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு, தென்கிழக்கு சுலவேசியின் டினாங்கியா மாவட்டத்தில் எட்டு மீட்டர் நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று விவசாயி ஒருவரைச் சாப்பிட்டதாகவும், 2018-ஆம் ஆண்டு, தென்கிழக்கு சுலவேசியின் முனா நகரில் ஏழு மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு 54 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை விழுங்கியதாகவும், 2017-இல், மேற்கு சுலவேசியில் நான்கு மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு விவசாயி ஒருவரை விழுங்கியதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க: லோக் சபா தேர்தல்| பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்கணிப்பு.. தவறை ஒப்புக்கொண்ட பிரசாந்த் கிஷோர்!

மலைப்பாம்பு
இரை உண்ட மயக்கம்! நள்ளிரவில் வீட்டிற்குள் ஹாயாக படுத்துக்கிடந்த 12 அடி நீள மலைப்பாம்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com