எந்தெந்த நாடுகள் தன்பாலின திருமணத்தை சட்ட ரீதியாக அங்கீகரித்துள்ளன? - முழுவிவரம்

தன்பாலின திருமணங்களுக்கான சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு விவாத பொருளாக உள்ள நிலையில், வேறு எந்தெந்த நாடுகள் தன்பாலின திருமணத்தை அங்கீகரித்துள்ளனர் என்பதை காணலாம்.
தன் பாலின திருமணம்
தன் பாலின திருமணம்புதிய தலைமுறை

தன்பாலின திருமணங்களுக்கான சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு விவாத பொருளாக உள்ள நிலையில், இது குறித்து உச்சநீதிமன்றம் கூறுகையில் “இதுபோன்ற திருமணங்களை தன்பாலின ஈர்ப்பு உள்ளவர்களும் மற்றவர்களை போல் மதிக்கப்பட வேண்டும் என்பதுதான் தங்களது நோக்கம் . மேலும் அவர்களது திருமணத்தை அங்கீகரிக்க முடியாது.

திருமண சட்டங்களை வடிவமைப்பது நாடாளுமன்ற, சட்டமன்றங்களின் முடிவு. அதில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது” என்று தீர்ப்பளித்து இருந்தது. இதன் அர்த்தம் தான் தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்க முடியாது என்ற தீர்ப்பு.

உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் LGBTQA+ அமைப்பினர் தங்களின் உரிமைக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இச்சூழலில் எத்தனை நாடுகளில் தன்பாலின திருமணத்திற்கான அங்கீகாரம் உள்ளது என்று விளக்குகிறது.

அங்கீகரித்த நாடுகள்:

இதன் அடிப்படையில் என்று பார்த்தால் 34 நாடுகள் என்ற புள்ளி விவரங்கள் கிடைக்கின்றன. தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் அளித்த முதல் நாடாக உள்ளது நெதர்லாந்து.

அந்நாட்டில் 2001ம் ஆண்டு தன்பாலின திருமணம் அங்கீகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2-வது நாடாக 2003-ம் ஆண்டு பெல்ஜியம் அங்கீகாரம் வழங்கியது.

2003ம் ஆண்டு முதல் ஒரு சில மாகாணங்களில் தன்பாலின திருமணத்திற்கு கனடாவில் அங்கீகாரம் கிடைத்தது.

அதே ஆண்டில் ஸ்பெயினிலும் அங்கீகாரம் வழங்கப்பட்டது. 2006-ல் தென்னாப்பிரிக்காவிலும், 2009-ல் நார்வே, ஸ்வீடனிலும், 2010-ல் போர்ச்சுகல், ஐஸ்லாந்து, அர்ஜெண்டினாவிலும் தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது.

2012-ம் ஆண்டில் டென்மார்க்கிலும், 2013-ம் ஆண்டு பிரேசில், பிரான்ஸ், உருகுவே, நியூஸிலாந்து நாடுகளிலும், 2014-ம் ஆண்டில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்திலும் தன்பாலின திருமணம் அங்கீகரிக்கப்பட்டது.

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் 2015ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. அதே ஆண்டில், அயர்லாந்திலும் அங்கீகரிக்கப்பட்ட தன்பாலின திருமணம், 2016-ல் கிரீன்லாந்து, கொலம்பியா, 2017-ல் பின்லாந்து ஜெர்மனி, மால்டா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

2019-ல் ஆஸ்திரியா, தைவான், ஈகுவடார், 2020ல் கோஸ்டாரிகா, 2022-ல் சிலி, ஸ்விட்சர்லாந்து, கியூபா, ஸ்லோவேனியா ஆகிய நாடுகளிலும் நடப்பு ஆண்டில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அன்டோர்ரா நாட்டிலும் தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளது.

தன் பாலின திருமணம்
நேற்று தீர்ப்பு.. இன்று நிச்சயதார்த்தம்: உச்சநீதிமன்றம் முன்பு மோதிரம் மாற்றிய தன்பாலின ஜோடி!

மெக்சிகோவின் பல்வேறு மாகாணங்களில் தன்பாலின திருமணம் சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டு எஸ்டோனிவில் தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் கிடைக்க உள்ளது என்பது கூடுதல் தகவல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com