what reason of 10 US prominent scientists disappeared in succession
அமெரிக்க விஞ்ஞானிகள்எக்ஸ் தளம்

அடுத்தடுத்து காணாமல் போன 10 விஞ்ஞானிகள்.. பதறும் அமெரிக்கா.. என்ன காரணம்?

இந்த வழக்குகளை விசாரிக்க, எரிசக்தித் துறை, பாதுகாப்புத் துறை மற்றும் மாநில, உள்ளூர் சட்ட அமலாக்க முகமைகளுடன் இணைந்து செயல்படப்போவதாக எஃப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
Published on

அமெரிக்காவில் 2023 முதல் தற்போது வரை, நாசா மற்றும் அணு ஆய்வு மைய விஞ்ஞானிகள் என10 பேர் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. இந்த வழக்குகளுக்கு இடையே எந்த அதிகாரப்பூர்வ தொடர்பும் நிறுவப்படவில்லை. சம்பந்தப்பட்ட அமைப்புகளிடமிருந்து மேலதிக தகவல்களைப் பெறப்போவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மேலும் முழுமையான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மிக முக்கியமான விண்வெளி மற்றும் அணுசக்தி தொடர்பான இரகசிய திட்டங்களில் பணியாற்றிய விஞ்ஞானிகள், மர்மமான முறையில் காணாமல் போனதாகவும், சிலர் உயிரிழந்ததாகவும் கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. இந்தச் செய்தி, உலக நாடுகளை உலுக்கியுள்ளது. மைக்கேல் டேவிட் ஹிக்ஸ், ஃபிராங்க் மைவால்ட், அந்தோனி சாவேஸ், மோனிகா ரெஸா, மெலிசா காசியாஸ், ஸ்டீவன் கார்சியா, நூனோ லோரெய்ரோ, கார்ல் கிரில்மேயர், வில்லியம் நீல் மெக்கஸ்லாண்ட், ஜேசன் தாமஸ் உள்ளிட்டவர்கள் இதில் அடக்கம். இதில் சிலர் வீட்டிலிருந்து நடந்து சென்றபோது காணாமல் போயுள்ளனர். அவர்களின் மொபைல் போன், பர்ஸ், சாவி போன்றவை வீட்டிலேயே இருந்துள்ளன.

usa govt
usa govtx page

இப்படி, அமெரிக்காவில் 2023 முதல் தற்போது வரை, நாசா மற்றும் அணு ஆய்வு மைய விஞ்ஞானிகள் என10 பேர் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. இந்த வழக்குகளில் பல தற்கொலை, விபத்துகள் அல்லது தனிப்பட்ட குற்றங்கள் எனக் கூறப்பட்டாலும், அணு அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் போன்ற முக்கியத் துறைகளுடன் தொடர்புடைய நபர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் ஒன்றாக இணைந்திருப்பது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

what reason of 10 US prominent scientists disappeared in succession
தென் சீனக் கடல் | பிலிப்பைன்ஸுக்குப் பயத்தைக் காட்டிய சீனா.. பின்னணியில் அமெரிக்கா?

அதேநேரத்தில், கூற்றுக்கள் இருந்தபோதிலும், இந்த வழக்குகளுக்கு இடையே எந்த அதிகாரப்பூர்வ தொடர்பும் நிறுவப்படவில்லை. சம்பந்தப்பட்ட அமைப்புகளிடமிருந்து மேலதிக தகவல்களைப் பெறப்போவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மேலும் முழுமையான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து எப்.பி.ஐ உள்ளிட்ட உயர்மட்ட அமைப்புகள் தீவிர விசாரணை நடத்த அதிபர் ட்ரம்பர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, இந்த வழக்குகளை விசாரிக்க, எரிசக்தித் துறை, பாதுகாப்புத் துறை மற்றும் மாநில, உள்ளூர் சட்ட அமலாக்க முகமைகளுடன் இணைந்து செயல்படப்போவதாக எஃப்.பி.ஐ. தெரிவித்துள்ளது. மேலும் நாசாவும் இந்த விசாரணைக்கு ஒத்துழைப்பதாகக் கூறியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து எரிக் பர்லிசன் என்பவர், "அணுசக்தி தொழில்நுட்பம், மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் விண்வெளி ஆகியவற்றில் நாம் சீனா, ரஷ்யா மற்றும் ஈரானுடன் போட்டியிடுகிறோம். இதற்கிடையில், நமது தலைசிறந்த விஞ்ஞானிகள் தொடர்ந்து காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு வெளிநாட்டு நடவடிக்கையின் அனைத்து அறிகுறிகளையும் கொண்டுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் மேற்பார்வை மற்றும் பொறுப்புக்கூறல் குழுவின் தலைவர் ஜேம்ஸ் கோமர், “இது தற்செயலாக நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, இது குறித்து நாடாளுமன்றம் மிகுந்த கவலை கொண்டுள்ளது. இதை நாங்கள் ஒரு தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதுவதால், எங்கள் குழு தற்போது இதைத் தங்களின் முன்னுரிமைகளில் ஒன்றாக ஆக்கியுள்ளது. இங்கு ஏதோ ஒரு தீய செயல் நடைபெறுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

what reason of 10 US prominent scientists disappeared in succession
இந்தோனேசியாவில் ஜலசந்தியை குறிவைக்கும் அமெரிக்கா.. ஏன் தெரியுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com