\
We're Going to Crash! Pilot's Final Scream Before Jet Explodes on Road
jet crash reuters

தரையில் மோதப்போகிறோம்! விமானியின் கடைசி அலறல்.. சாலையில் விழுந்து வெடித்த பயங்கரம்!

அமெரிக்காவின் புளோரிடாவில் தனியார் விமானம் குடியிருப்புப் பகுதியில் விழுந்து வெடித்ததில் 9 பேர் உயிரிழந்தனர்.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குடியிருப்புப் பகுதியில் தனியார் விமானம் விழுந்து நொறுங்கியதில் குறைந்தது 9 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானம் தரையில் விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விமானி பேசிய அதிர்ச்சியூட்டும் வார்த்தைகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று, புளோரிடாவின் கிரீனேக்கர்ஸ் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டின் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட லியர்ஜெட் 60 (Learjet 60) ரக தனியார் விமானம், பஹாமாஸ் நாட்டின் நார்த் எலியூதெரா தீவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம், மோசமான வானிலையால் பல பிரச்சினைகள் ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகிறது. இதனால் விமானத்தை மேலும் 2,000 அடி உயரத்திற்கு எடுத்துச் செல்ல விமானிகள் அனுமதி கேட்டுள்ளனர்.

ஆனால், நிலைமை தொடர்ந்து மோசமடைந்ததால் விமானம் வேகமாக உயரத்தை இழக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து விமானிகள் கட்டுப்பாட்டு அறைக்கு அவசர உதவி கோரி தகவல் அனுப்பியுள்ளனர்.

May Day May Day ஒரு நிமிடத்தில் 10,000 அடி வேகத்தில் கீழே இறங்குகிறோம்" என்று விமானி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, "ஒரு நிமிடத்திற்கு 20,000 அடி வேகத்தில் கீழே இறங்குகிறோம். தரையில் மோதப்போகிறோம்" என்றும் எச்சரித்துள்ளார். அப்போது விமானத்தில் இருந்த பெண் பணியாளர் ஒருவர், "கடவுளே! நமக்கு நேரமே இல்லை விழப்போகிறோம்” என்று அலறியுள்ளார். இதுவே விமானத்தில் இருந்து பதிவான கடைசி தகவல்களில் ஒன்றாகும். விமானம் ஒரு நிமிடத்திற்கு 32,000 அடிக்கும் அதிகமான வேகத்தில் கீழே இறங்கியதாக விமானத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனத்தில் இருந்த கேமராவில் விமானம் தரையில் விழுந்து தீப்பிடிக்கும் காட்சி பதிவாகியுள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகியுள்ளது. விமானம் விழுந்த இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டதுடன், கரும்புகையும் தீப்பிழம்புகளும் எழுந்துள்ளன.

விபத்து நடந்த பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்துகொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

We're Going to Crash! Pilot's Final Scream Before Jet Explodes on Road
நடுவானில் Hijack மிரட்டல்! அலறிய பயணிகள்.. விமானத்தை அவசரமாகத் திருப்பிய விமானி!