\
canada man lost his wallet as a teenager 51 years later a found
Model Imagechat gpt

1975இல் தொலைந்த பணப்பை.. 51 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெடுப்பு.. கனடாவில் சுவாரஸ்யம்!

51 ஆண்டுகளுக்குப் பிறகு தனது கைக்கு வந்த பணப்பையைப் பெற்றுக் கொண்ட ரிச்சர்ட், இது தன் பள்ளிப் பருவ நினைவுகளை மீண்டும் கண்முன் கொண்டுவந்த ஒரு காலப் பொட்டலம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Published on: 
Summary

கனடாவில் 51 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்துபோன பணப்பை ஒன்று, மீண்டும் உரிமையாளிடமே ஒப்படைக்கப்பட்ட சுவாரஸ்யமான சம்பவம் அண்மையில் நடந்துள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக மண்ணுக்கு அடியில் கிடந்தபோதிலும், அதில் இருந்த பொருட்கள் அப்படியே சேதமடையாமல் இருந்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தைச் சேர்ந்தவர் ரிச்சர்ட் கில்ராய். இவர், 1975-ஆம் ஆண்டு தனது 17ஆவது வயதில் (தற்போது 68 வயது) டார்ட்மவுத் பகுதியில் உள்ள ஓர் இடத்தில் தனது பணப்பையைத் தவறவிட்டார். இந்த நிலையில், மேட்டி கோல்ட்ஸ்மித் என்ற தச்சர், டார்ட்மவுத்தில் உள்ள ஒரு பழைய வீட்டைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இந்த பணப்பையைக் கண்டெடுத்தார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தரைக்கு அடியில் கிடந்தபோதிலும், அதில் இருந்த பொருட்கள் சேதமடையாமல் இருந்தன. அதில் அவருடைய பள்ளி அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், 1 டாலர் நோட்டு, 'ஹேம்லெட்' என்ற நாடகத்தின் நுழைவுச் சீட்டு ஆகியன அப்படியே இருந்தன. பணப்பையில் இருந்த சான்றிதழ்களை அடிப்படையாக வைத்து, மேட்டி கோல்ட்ஸ்மித் உள்ளூர் ஃபேஸ்புக் குழு ஒன்றில் புகைப்படங்களைப் பதிவிட்டார்.

canada man lost his wallet as a teenager 51 years later a found
chat gpt

அவர் வெளியிட்ட பதிவில், "1975-ல் டார்ட்மவுத் உயர்நிலைப் பள்ளியில் படித்த, 1958இல் பிறந்த ரிச்சர்ட் கில்ராய் என்பவரை யாருக்காவது தெரியுமா? 1975 முதல் மண்ணுக்குள் தொலைந்து போயிருந்த அவருடைய பணப்பையை ஒரு புனரமைப்புப் பணியின்போது கண்டெடுத்தேன். அதில் நிறைய அருமையான பொக்கிஷங்கள் இருந்தன. முடிந்தால் அதை அவரிடம் திருப்பிக் கொடுக்க விரும்புகிறேன்” எனப் பதிவிட்டிருந்தார். மேலும் ஆச்சரியப்படும் விதமாக, கில்ராயின் மனைவி டோனா, அந்தப் பதிவில் அது தன் கணவருடையது என்றும், அவர் உயிருடனும் நலமுடனும் இருக்கிறார் என்றும், 50 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பணப்பையைத் தொலைத்தது அவருக்கு நினைவிருக்கிறது என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, 51 ஆண்டுகளுக்குப் பிறகு தனது கைக்கு வந்த பணப்பையைப் பெற்றுக் கொண்ட ரிச்சர்ட், இது தன் பள்ளிப் பருவ நினைவுகளை மீண்டும் கண்முன் கொண்டுவந்த ஒரு காலப் பொட்டலம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com