\
Was Starlink Used to Kill People Elon Musk Issues Warning
elon muskreuters

மக்களை கொல்ல பயன்படுத்தப்பட்டதா Star Link? எச்சரித்த எலான் மஸ்க்

மக்களை கொல்ல ஸ்டார்லிங்கை பயன்படுத்த அனுமதி இல்லை: எலான் மஸ்க் விளக்கம்
Published on: 

செய்தியாளர் - M.மீரா

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் ராணுவம் பயன்படுத்தி வரும் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையின் வேகத்தைத் தனது நிறுவனம் குறைத்ததாக எலான் மஸ்க் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் இணைய சேவையை உக்ரைன் ராணுவம் ட்ரோன்களை இயக்கவும், தகவல்களைப் பரிமாறவும், ரஷ்யத் தாக்குதல்களை எதிர்கொள்ளவும் பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் இணைய வேகம் குறைக்கப்பட்டதால், போர்முனையில் ராணுவ நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

Starlink India Row: Musk vs Gov
Starlink India Row: Musk vs GovAI

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட எலான் மஸ்க், ஸ்டார்லிங்க் சேவையைப் பயன்படுத்தி மக்களைக் கொல்லும் தாக்குதல்களை நடத்த அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளார். உக்ரைன் ராணுவம் ஸ்டார்லிங்கின் பயன்பாட்டு விதிகளை மீறி, தாக்குதல் நடத்தும் ட்ரோன்களை இயக்கியதாகவும், அந்தத் தவறான பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Was Starlink Used to Kill People Elon Musk Issues Warning
"Hire the robot, fire the human" உலகில் வரப்போகும் மிகப்பெரிய ஆபத்து! பில் கேட்ஸ் எச்சரிக்கை!

ஸ்டார்ஷீல்டு தொடர்பான முடிவுகளில் அமெரிக்க அரசாங்கத்துக்குக் கட்டுப்பாடு இருப்பதாக மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் அமெரிக்க அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத்தும் மறுத்துள்ளனர்.

இந்நிலையில், ஸ்டார்லிங்க் மற்றும் ஸ்டார்ஷீல்டு செயற்கைக்கோள் இணைப்புகளின் வேகம் மீண்டும் தேவையான அளவுக்கு அதிகரித்துள்ளதாக ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இதனால், ராணுவத்தின் தகவல் தொடர்பு, பொருட்களைக் கொண்டு செல்லும் பணிகள் மற்றும் ரஷ்யாவின் ஷாஹெட் ட்ரோன்களை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் மேம்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Ukraine war
Ukraine warReuters

இதற்கிடையே, ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா புதிய பேச்சுவார்த்தை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்த மாதம் முத்தரப்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Was Starlink Used to Kill People Elon Musk Issues Warning
ஈரானால் அதிகரிக்கும் அச்சம்.. மத்திய கிழக்கிலிருந்து அதிகாரிகளை வெளியேற்றும் அமெரிக்கா!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com