வாரிசுகள் இருந்தபோதும், ரூ 10,80,000 கோடி சொத்தை அறக்கட்டளைகளுக்கு கொடுத்த தொழிலதிபர்... யார் அவர்?

பத்து லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளை 3 பிள்ளைகளுக்கும் கொடுக்காமல் அறக்கட்டளைகளுக்கு உயில் எழுதி வைத்திருக்கிறார் ஒரு தொழிலதிபர்.... யார் அவர்? அவர் என்ன தொழில் செய்து வருகிறார்? ஆவலாக இருக்கிறதா? தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்!
warren buffett
warren buffettpt web

பங்குச்சந்தையின் காட் ஃபாதர் (GOD FATHER) என அறியப்படுபவர். மிகவும் எளிமையானவர். பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் பலருக்கும் மிகவும் பிடித்தமானவர்.

DON'T GREED... DON'T PANIC...

இதுதான் இவரின் தாரக மந்திரம்...

சம்பாதித்து சம்பாதித்து அறக்கட்டளைகளுக்கு தானமளிக்கும் உலகப்பெரும் பணக்காரர் வரிசையில் இருப்பவர்.

இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரர் வாரன் பஃப்பட்...!

வாரன் பஃப்பட்
வாரன் பஃப்பட்

93 வயதான வாரன் பஃப்பட், தனக்கு பிறகு தனது சொத்துகளை யார் நிர்வகிக்கப் போகிறார்கள் என உயில் எழுதி வைத்துள்ளார். அவர் உயில் எழுதுவது இது முதல் முறையல்ல. பலமுறை உயிலை மாற்றி மாற்றி எழுதியிருக்கிறார் பஃப்பட். உலக பெரும்பணக்காரர்கள் பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளார், BERKSHIRE HATHWAY நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான வாரன் பஃப்பட்.

warren buffett
பி.ஹெச்டி படிப்பு.. தொழிலதிபர், வழக்கறிஞர்; மத்திய பிரதேச முதல்வராகும் மோகன் யாதவ்; யார் இவர்?

சமீபத்தில் பில் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கும் மேலும் 3 அறக்கட்டளைகளுக்கும் 5.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது 44,000 கோடி ரூபாயை வழங்கியுள்ளார் பஃப்பட். என் இறப்பிற்குப் பிறகு கேட்ஸ் அறக்கட்டளைக்கு நிதியுதவி வழங்கப்படாது எனத் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், பஃப்பட் அந்த அறக்கட்டளைக்கு எவ்வளவு நிதியுதவி வழங்கியிருக்கிறார் தெரியுமா?

3 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாய்.

இதை அந்த அறக்கட்டளையின் தலைமைச் செயல் அதிகாரியே தெரிவித்திருக்கிறார் பெருமையுடன்.

warren buffett
“சரணடைந்தவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை”- ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் திருமா சொன்ன திடுக்கிடும் தகவல்!

வாரன் பஃப்பட்டிற்கு, சூசி, ஹோவி மற்றும் பீட்டர் என 3 பிள்ளைகள் உள்ளனர். மூத்த குடிமக்களான 3 பேருமே தனித்தனியாக அறக்கட்டளைகளை நிர்வகித்து வருகின்றனர். இந்த அறக்கட்டளைகள் மூலம் வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு, கல்வி, உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைக்கும் வகையில் சேவைகள் வழங்கி வருகின்றன.

warren buffett
வாரன் பஃப்பட்

பஃப்பெட்டிடம் எஞ்சியிருக்கும் 10 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் யாருக்குச் சேரும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. எஞ்சியிருக்கும் அனைத்து சொத்துகளையும் ஒரு புதிய அறக்கட்டளைக்கு உயில் எழுதி வைத்திருப்பதாகவும், அதனை அவரது பிள்ளைகள் கண்காணிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

warren buffett
புதிய குற்றவியல் சட்டங்கள்: “பதவிக்கு வருபவர்கள் நீதித்துறையில்தான் கை வைப்பார்கள்” - துரைமுருகன்

எனவே எந்த பரோபகார நோக்கங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை அவரின் 3 பிள்ளைகள்தான் முடிவு செய்ய வேண்டும். பஃப்பெட்டின் இந்த முடிவினால் பங்குகளின் விலை, அரசியல், சமூகநலன் உள்ளிட்ட அனைத்தும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவரின் மகன் பீட்டர் தெரிவித்துள்ளார். அறக்கட்டளைகள் மூலம் தாங்கள் செய்து வரும் பணிகளின் தொடர்ச்சியாக இருக்க வாய்ப்பிருப்பதாக மற்றொரு பிள்ளையான சூசி கூறியுள்ளார்.

warren buffett
வாரன் பஃப்பட்

இளமைபருவத்தில் எளிமையாக வாழ்க்கையை தொடங்கிய பஃப்பட், வார இதழ்களை வீடுவீடாக சென்று விற்பனை செய்து வந்தவர். பள்ளிப் பருவத்திலேயே மளிகைக்கடையில் பணி, செய்தித்தாள் டெலிவரி, கோல்ஃப் பந்துகள், முத்திரைத்தாள் விற்பனை என வியாபாரத்தில் ஆர்வத்துடன் இருந்தவர். இதில், ஈட்டிய பணத்தை பங்குகளில் முதலீடு செய்யும் பழக்கம் கொண்ட பஃப்பட், பின்னாளில் உலகின் மிகப்பெரிய பங்கு நிறுவனத்தின் தலைவராக உருவானவர்.

warren buffett
ஆம்ஸ்ட்ராங் | சாலை மறியலில் ஆதரவாளர்கள்... கண்டனத்தை பதிவு செய்யும் அரசியல் தலைவர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com