இந்தோனேசியா - நிலநடுக்கத்தை தொடர்ந்து எரிமலை வெடிப்பு...!

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் நேற்று முன்தினம் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5-ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக, வடக்கு சுலவெசி மாகாணத்தில் இருக்கும் ருயாங் தீவில் எரிமலை வெடித்துச் சிதறத் தொடங்கியது.

எரிமலை வெடிப்பு
எரிமலை வெடிப்புஇந்தோனேசியா

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருக்கும் 800-க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். எரிமலையை சுற்றி 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தோனேசியா
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

மேலும், எரிமலை வெடிப்பு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com