ஜப்பான்முகநூல்
உலகம்
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது.
ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள Kyushu, Shikoku பகுதிகளில் 25 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோதிலும், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.
ஜப்பான் நிலநடுக்கம்
நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதங்கள் ஏற்படவில்லை என்றும், சிறிய அளவிலான சேதங்கள் மட்டுமே ஏற்பட்டதாகவும் ஜப்பான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் உள்ள அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளதாக ஜப்பான் அணுமின் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.