தேசிய பறவைகளுடன் விமானத்தில் பயணித்த அமீரக பயணிகள் :வைரல் வீடியோ

தேசிய பறவைகளுடன் விமானத்தில் பயணித்த அமீரக பயணிகள் :வைரல் வீடியோ

தேசிய பறவைகளுடன் விமானத்தில் பயணித்த அமீரக பயணிகள் :வைரல் வீடியோ
Published on

விமானத்தில் வல்லூறு பறவையுடன் இரண்டு பேர் பயணம் செய்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விமானப் பயணங்களில் சில ஆச்சர்யமான விஷயங்கள் அரங்கேறுவது உண்டு. குறிப்பாக சிலர் சீட் பெல்ட் போட தெரியாமல் தவிப்பார்கள். மேலும் சிலர் விமான பறக்கும் போது பயத்துடன் இருப்பார்கள். அத்துடன் விமானம் தரை இறங்கும் போது பயந்து நடுங்குவார்கள். இவை அனைத்திலும் இருந்து மாறுபட்டிருக்கிறது ஒரு புது விமானப் பயணம். அதாவது விமானத்தில் பயணிகள் பிரயாணம் செய்வதை பார்த்திருப்போம். ஆனால் இருவர் வல்லூறு பறவைகளுடன் விமானத்தில் பயணித்துள்ளனர்.

இதுகுறித்து அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், “நான் பயணிக்கும் விமானத்தில் இரண்டு பேர் பறவைகளுடன் பயணிக்கின்றனர்” என்று பதிவிட்டார். இந்த ட்வீட் உடனே வைரலானது. இந்த வீடியோவை பார்த்து அனைவரும் மிகவும் ஆச்சர்யப்பட்டு ஜாலியான கம்மெண்ட்டை பதிவு செய்தனர். 

அதிலும் குறிப்பாக ஒருவர்,  “ஜோர்டன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்தால் இதுபோன்று நிறையே ஃபால்கன் (வல்லூறு) பறவைகளைப் பார்க்கமுடியும். ஏனென்றால் அந்த ஏர்லைனஸ் ஒரு பயணி 2 ஃபால்கன் பறவைகள் எடுத்து செல்ல அனுமதி அளிக்கிறது. அத்துடன் அரபு அமீரகத்தில் ஃபால்கன் பறவைகளுக்கு பாஸ்போர்ட் அளிக்கப்படுகிறது” என மற்றொரு சுவாரஸ்யமான தகவலை பதிவிட்டுள்ளார். இந்த இரு பயணிகளும் அரபு நாட்டு உடையை அணிந்திருந்தனர் என்பது குறிப்படத்தக்கது. இந்தப் பறவை அரபு அமீரகத்தின் தேசியப் பறவை என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.

அதேபோல மற்றொரு நபர் “பறவைகள் எவ்வாறு இறக்கையை உபயோகிக்காமல் பறக்கும் என்ற கேள்விக்கு இந்த வீடியோ தான் பதில்” எனப் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com