usa president donald trump signs order banning trans athletes in women's sports
ட்ரம்ப்எக்ஸ் தளம்

அமெரிக்கா | மூன்றாம் பாலினத்தவர் விளையாட்டில் பங்கேற்க தடை.. ட்ரம்ப் உத்தரவு!

அமெரிக்காவில், பிறப்பால் ஆணாக இருந்து திருநங்கைகளாக மாறியவர்கள், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வீராங்கனைகளாக பங்கேற்க தடை விதித்து அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
Published on

அமெரிக்க அதிபராகப் பதவியேற்றிருக்கும் டொனால்டு ட்ரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு திட்டங்களை ரத்து செய்தும், புதிய பணிகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவுகளில் கையெழுத்திட்டு வருகிறார். அந்த வகையில், ஆண், பெண் என இரு பாலினத்தவர்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். அதன்படி, அமெரிக்காவில் பாதுகாப்புப் படைகளில் மாற்றுப் பாலினத்தவருக்குத் தடைவிதிக்க வகை செய்யும் உத்தரவில், கையெழுத்திட்டிருந்தார்.

usa president donald trump signs order banning trans athletes in women's sports
ட்ரம்ப்எக்ஸ் தளம்

இந்த நிலையில் பெண்கள் விளையாட்டில் திருநங்கைகள் பங்கேற்பதைத் தடை செய்யும் நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இதுகுறித்து அவர், “இந்த நிர்வாக உத்தரவின் மூலம் பெண்கள் விளையாட்டு மீதான போர் முடிந்துவிட்டது. பெண்களை ஆண்கள் வெல்ல அனுமதிக்க மாட்டோம். பெண் விளையாட்டு பெருமைமிக்க பாரம்பரியத்தை நாங்கள் பாதுகாப்போம். ஆண்கள் எங்கள் பெண்களை அடிக்க, காயப்படுத்த, ஏமாற்ற அனுமதிக்கமாட்டோம். இனி பெண்கள் விளையாட்டு பெண்களுக்கு மட்டுமே” எனத் தெரிவித்துள்ளார். இது, அந்நாட்டு மூன்றாம் பாலினத்தவரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

usa president donald trump signs order banning trans athletes in women's sports
அமெரிக்கா | ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவருக்கு தடை.. ட்ரம்ப் உத்தரவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com