விமானத்தில் இருந்து கழன்று விழுந்த டயர்! விமானியின் சாதுர்யத்தால் உயிர்தப்பிய பயணிகள்!

உயரக்கிளம்பிய விமானத்தின் டயர் தீடீரென் கழன்று விழுந்த நிலையில், விமானியின் சாதுரியத்தால் பெரும் விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா
அமெரிக்காமுகநூல்

விண்ணில் பறந்த விமானத்தின் டயர் தீடீரென் கழன்று விழுந்த நிலையில், விமானியின் சாதுரியத்தால் பெரும் விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

போயிங் பி 777 இந்த ஜெட் விமானம் அமெரிக்காவின் யுனைடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது. இவ்விமானமானது நேற்று காலிஃப்போர்னியாவில் இருந்து சான் ஃபிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் இருந்து ஜப்பானுக்கு செல்வதற்காக தயாராகி கொண்டிருந்துள்ளது.

இந்நிலையில், விமானம் உயரக்கிளம்பிய நேரத்தில் திடீரென விமானத்தின் டயரானது தனியாக கழன்று விழவே பயணிகள் பெரும் பதற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.அத்தருணத்தில், விமானியின் சாதுர்யத்தால் 249 பயணிகளை கொண்ட விமானமானது லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் பாதுக்காப்பாக இறக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா
பெண் நிரூபரிடம் அத்துமீறல்.. ரோபோவும் இப்படியா? என்னதான் நடக்குது இங்க!

விமானத்தில் இருந்து கழன்று விழுந்த டயரானது சான் ஃபிரான்சிஸ்கோ விமான நிலையத்தின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் கிடந்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் விமானத்தில் இருந்த பயணிகள் மாற்று விமானத்தின் மூலம் ஜப்பானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த விபத்தினை குறித்து யுனைடெட் ஏர்லைன்ஸ் நிபுணர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த செய்தியானது சமூக வளைதளத்தில் பரவியதை அடுத்து அசம்பாவிதத்தினை தடுத்த விமானிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com