பெண் நிரூபரிடம் அத்துமீறல்.. ரோபோவும் இப்படியா? என்னதான் நடக்குது இங்க!

மனிதர்களால் ஏற்படும் பாலியல் சீண்டல்கள் அதிகரித்தும் வரும் சூழலில் ரோபோவும் பெண் நிரூபரிடம் அத்துமீறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரோபோ
ரோபோமுகநூல்

பெண்களுக்கும், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் அதிகரித்து வரும் சூழலில், சவுதி அரேபியாவில் ஆண் ரோபோ ஒன்று அதன் அருகில் நின்று கொண்டிருந்த பெண் நிருபரிடம் அத்துமீறிய சம்பவம் பெரும் கேள்வியினை உருவாக்கியுள்ளது.

சவிதி அரேபியாவில், முஹம்மது என்னும் உலகின் ஆண் ரோபோ ஒன்றினை நேரலையில் காண்பிப்பதற்காக பெண் நிருபர் ஒருவர் அதன் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, அந்த ஆண் ரோபோவானது பெண் ரோபோவிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளது.

பெண் நிபுணர் பேசிக்கொண்டிருக்கும் போது ஆண் ரோபோவானது அப்பெண்ணை நோக்கி கையை தூக்கி அவரை தொடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொளி பதிவானது சமூக வலைதளத்தில் தற்போது 8 லட்சத்துக்கும் மேலான பார்வை பெற்று, பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 8 ஆம் தேதியான இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படும் சூழல், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்களும் இதனால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.

ரோபோ
”மனைவி வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என கணவர் எதிர்பார்ப்பது கொடுமை இல்லை” - டெல்லி உயர்நீதிமன்றம்

மனிதர்களின் செயல்களால்தான் இது நிகழ்கிறது என்றால், மற்றொரு புறம் உயிரற்ற ரோபோக்கள் கூட இதனை விட்டு வைக்கவில்லை. சமீபத்தில் கூட மெட்டாவெர்ஸ் எனும் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்ப உலகத்தில் கூட 16 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி இருந்த சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.

விஆர் கேமினை அவதார் வடிவத்தில் விளையாடிய பெண் ஒருவரை 10 க்கும் மேற்பட்ட ஆண் அவதார்கள் கூட்டு பாலியல் சீண்டல்களுக்கு உண்டாக்கிய நிகழ்வு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com