காதலனை கரம்பிடிக்க பாகிஸ்தான் வந்த நியூயார்க் பெண்; அரசாங்கத்திடம் வைத்த அதிரடி கோரிக்கை..!
ஆன்லைனில் காதலித்த டீனேஜ் இளைஞரை கரம்பிடிப்பதற்காக நியூயார்க்கிலிருந்து பாகிஸ்தான் வந்த இளம்பெண்.. இளைஞரின் குடும்பம் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாததால், பாகிஸ்தான் அரசாங்கத்திடம் பெண் வைத்த அதிரடி கோரிக்கைதான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அப்படி அந்த பெண் என்ன கேட்டார். விரிவாக பார்க்கலாம்.
நியூயார்க்கைச் சேர்ந்தவர் 33 வயது ஒனிஜா ஆண்ட்ரூ ராபின்சன்.. இவருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த 19 வயதான நிடல் அகமது என்ற இளைஞருக்கும் ஆன்லைனில் நட்பு மலர்ந்துள்ளது. நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாற திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருவரும் முடிவெடுத்துள்ளனர்..
இதற்காக, ராபின்சன் நியூயார்க்கிலிருந்து பாகிஸ்தானுக்கு வந்துள்ளார். எப்படியாவது அகமதை கரம்பிடித்துவிட வேண்டும் என்று ஆவலோடு வந்த ராபின்சனுக்கு காத்திருந்தது அதிர்ச்சி..
நிடல் அகமதின் பெற்றோரிடத்தில் இவர்களது உறவு குறித்து தெரிவித்துள்ளனர். ஆனால், நிடல் அகமதின் பெற்றோர் இவர்களது உறவை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனால், அவர்களது வீட்டை விட்டு வெளியேறிய ராபின்சன், 100000 டாலர்கள் வேண்டுமென்று பாகிஸ்தான் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.
பின்னர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து வரும் அவர், தைரியமான ஒரு புதிய தொலைநோக்கு பார்வையை தான் தற்போது தேர்ந்தெடுத்துள்ளதாகவும், இந்த பணத்தை வைத்து பாகிஸ்தானை புனரமைக்க போவதாகவும் கூறிவருகிறார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் , “ இந்த முழு நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதே எனது திட்டம். இதற்காகவே, நான் $100000 கேட்கிறேன். இந்த வார இறுதிக்குள் எனக்கு $20000 ரொக்கம் எனக்கு தேவைப்படுகிறது. அதுதான் அரசாங்கத்திற்கு நான் வைக்கும் கோரிக்கை. அரசாங்கம் இந்தத் தெருக்களை சரிசெய்ய வேண்டும். இந்த தெருக்கள் மிகவும் ஆபத்தாக இருக்கிறது . எனக்கு அது பிடிக்கவில்லை.
பாகிஸ்தானுக்கு புதிய பேருந்துகள், டாக்சிகள் மற்றும் கார்கள் தேவை என்பதை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இதை உங்கள் கேமராவில் படமாக்கிக் கொள்ளுங்கள். எனக்கு திருமணமாகிவிட்டது. நாங்கள் விரைவில் துபாய்க்கு செல்ல இருக்கிறோம். துபாயில்தான் எங்களது குழந்தைகளை பெற இருக்கிறோம். “ என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ராபின்சனின் மகன் என்னும் கூறும் நபரான ஜெரேமியா தெரிவிக்கையில், “ எனது தாயார் மனநல கோளாறால் அவதிப்படுகிறார்.. அவரை வீட்டிற்கு அழைத்துசெல்ல நாங்கள் படாதபாடு படுகிறோம். “ என்று தெரிவித்துள்ளார்..
மேலும் , ராபின்சன் நான்கு குழந்தைகளுக்கு தாய் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம்தான் பாகிஸ்தானில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.