US Suffers Rising Losses in Ongoing Iran Conflict
US - IranPT

ஈரான் மீது தொடர் தாக்குதல் | மேலும் மேலும் இழப்புகளைச் சந்திக்கும் அமெரிக்கா!

ஈரான் போரில் போர் விமானங்கள், ட்ரோன்கள், விமானம் தாங்கிக் கப்பல்கள் மற்றும் பல ராணுவச் சொத்துகளை இழந்துள்ளது அமெரிக்கா.
Published on
Summary

அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப் போரின் முதல் 3 வாரத்தில் ஈரானின் ஏவுகணைகள், ட்ரோன்கள் தாக்குதலால் அமெரிக்க இராணுவத்திற்கு 1.4 முதல் 2.9 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்பட்டதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. F-15E, F-35 போர் விமானங்கள், MQ-9 ரீப்பர் ட்ரோன்கள், எரிபொருள் நிரப்பும் விமானங்கள், ரேடார் அமைப்புகள், USS ஜெரால்ட் ஆர். ஃபோர்டு கப்பல் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடங்கியதிலிருந்து, ஈரானிய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களாலேயே, பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள அமெரிக்க இராணுவ உபகரணங்கள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன என்று வெள்ளிக்கிழமை வெளியான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த பிப்​ர​வரி 28-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா​வும் இஸ்ரேலும் இணைந்து தாக்​குதலைத் தொடங்​கின. இந்தப் போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள சூழலில், மத்திய கிழக்கில் நொடிக்குநொடி பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில்தான் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும், 10 நாட்களுக்கு ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தப்போவதாகவும் ட்ரம்ப் அறிவித்தார்.

US Suffers Rising Losses in Ongoing Iran Conflict
US Aircraft file photo

அதேவேளையில் அமெரிக்கா, தரைவழித் தாக்குதலை தொடங்க கூடுதலாக 10 ஆயிரம் ராணுவ வீரர்களை மத்திய கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பி வருவதாகவும், ஐக்கிய அரபு அமீரகத்தின் உதவியுடன் ஈரான் மீது அமெரிக்கா ஒரு தரைவழித் தாக்குதல் நடத்த தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்​ரேல் போரில் முதல் 3 வாரங்களில் மட்டும் ஈரானின் ஏவு​கணை மற்றும் ட்ரோன் தாக்​குதல்​களால் அமெரிக்​கா​விற்கு சுமார் 1.4 பில்​லியன் டாலர் முதல் 2.9 பில்லியன் டாலர் (இந்​திய மதிப்​பில் சுமார் ரூ.13,000 கோடி முதல் ரூ.29,000 கோடி வரை) இழப்பு ஏற்​பட்​டுள்​ள​தாகக் கணக்​கிடப்​பட்டுள்​ளது. இந்த செய்தியை அமெரிக்​கா​விலிருந்து வெளி​யாகும் ‘வால் ஸ்ட்​ரீட் ஜர்​னல்' நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்த இழப்பு குறித்து பென்​டகன் முன்​னாள் பட்​ஜெட் அதி​காரி எலைன் மெக்கஸ்​கரும் உறு​திப்​படுத்​தி​யுள்​ளார்.

US Suffers Rising Losses in Ongoing Iran Conflict
தரையில் வைத்தே அசுர தாக்குதல்? 10 லட்சம் வீரர்களை இறக்கிய ஈரான்.. பின்வாங்கும் அமெரிக்க வீரர்கள்?

இழப்புக்கு உள்ளானவற்றின் விவரம்

மார்ச் 1ஆம் தேதி 3 F-15E ரக போர் விமானங்கள் குவைத் விமானம் ஒன்றால் தவறுதலாகச் சுட்டு வீழ்த்தப்பட்டன. மார்ச் 16ஆம் தேதி ஒரு F-35 ஸ்டெல்த் ஜெட் விமானம் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்பட்டதை அடுத்து அவசரமாகத் தரையிறங்கியது. ஈராக் வான்​பரப்​பில் இரண்டு எரிபொருள் நிரப்​பும் விமானங்​கள் மோதிக்​கொண்​ட​தில் ஆறு வீரர்​கள் உயிரிழந்​தனர். சவுதி அரேபி​யா​வில் உள்ள இளவரசர் சுல்​தான் விமானப்​படை தளத்​தின் மீது ஈரான் நடத்​திய ஏவுகணைத் தாக்​குதலில், 5 கேசி-135 ரக விமானங்​கள் சேதமடைந்து தற்​போது பழுது​பார்க்​கப்​பட்டு வரு​கின்​றன. 12க்கும் மேற்பட்ட MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானங்களில் பல ஏவுகணைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டவை மற்றும் சில தரையில் அழிக்கப்பட்டவை. சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்களில் இருந்த விமானங்கள் மற்றும் ரேடார் அமைப்புகளையும் ஈரான் சேதப்படுத்தியுள்ளது.

US Suffers Rising Losses in Ongoing Iran Conflict
iran war reuters

மார்ச் 12ஆம் தேதி அன்று யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு (USS Gerald R. Ford) என்ற விமானம் தாங்கிக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது; அக்கப்பல் தற்போது கிரீஸில் உள்ள சூடா விரிகுடாவில் பழுதுபார்க்கப்பட்டு வருவதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. நடந்து வரும் இந்த மோதலில் இதுவரை 13 அமெரிக்க வீரர்​கள் உயிரிழந்துள்ளனர்; சுமார் 290 வீரர்​கள் காயமடைந்துள்ளனர். பாதிக்​கப்​பட்ட மற்​றும் இழந்த ராணுவத் தளவாடங்​களை மீண்​டும் வாங்​கு​வதற்​காக சுமார் 200 பில்​லியன் டாலர் கூடு​தல் நிதியை ஒதுக்க அமெரிக்​கப் பாது​காப்புத் தலை​மையக​மான பென்​டகன்​ திட்​ட​மிட்​டுள்​ள​தாகவும் வால்​ ஸ்ட்​ரீட்​ ஜர்​னல்​ தெரி​வித்​துள்ளது.

US Suffers Rising Losses in Ongoing Iran Conflict
தேடித்தேடி வெளுக்கும் ஈரான் படைகள்.. ஹோட்டலில் பதுங்கிய அமெரிக்க வீரர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com