தேடித்தேடி வெளுக்கும் ஈரான் படைகள்.. ஹோட்டலில் பதுங்கிய அமெரிக்க வீரர்கள்!
ஹார்முஸ் நீரிணை முடக்கம், உலக எரிபொருள் தட்டுப்பாட்டை தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்க ராணுவத் தளங்கள் தாக்குதலுக்கு உள்ளாக, பல வீரர்கள் வளைகுடா நாடுகளின் ஹோட்டல்கள், அலுவலகங்களில் பதுங்கியுள்ளதாக ஈரான் குற்றம்சாட்டி, அங்கு தங்க அனுமதி அளித்தால் ஹோட்டல்களையே குறிவைத்து தாக்குவோம் என எச்சரித்துள்ளது.
ஈரான் நடத்திவரும் தாக்குதலுக்கு பயந்து அமெரிக்க ராணுவ வீரர்கள் அங்குள்ள ஹோட்டல்களில் பதுங்கிக்கொண்டதாக குற்றம் சாட்டிய ஈரான், ஹோட்டல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான ஒரு மாதத்தை எட்டியுள்ளது. போரின் முதல் நாளிலேயே ஈரானின் உட்சபட்சத் தலைவர் அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். இதற்கு பழிவாங்கப்போவதாக தெரிவித்த ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளவாடங்கள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தி வருகிறது.
குறிப்பாக, உலகின் 20 சதவீதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடந்து வரும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கிவைத்திருப்பதால் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனையடுத்து, ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்துவதாக சமீபத்தில் டிரம்ப் அறிவித்தார்..இந்த நிலையில் இந்த தாக்குதலை மேலும் 10 நாட்களுக்கு அதாவது ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்போவதாக அறிவித்தார்..ஆனால் மறுபக்கம் ஆயிரக்கணக்கான வீரர்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பி வைத்தார்...ஈரானின் இந்த முடிவு ஈரானுக்கு சந்தேகத்தை கூட்டியது... எந்த நேரத்திலும் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்பதால் ஈரான் லட்சக்கணக்காண வீரர்களை தயார் நிலையில் வைத்துள்ளது.
அதேசமயம், ஈரான் நடத்திய தாக்குதலில் அரபு எமிரேட்ஸ், சவூதி, அரேபியா, குவைத் உள்ளிட்ட அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் பல அமெரிக்க வீரர்கள் ராணுவத் தளங்களைவிட்டு அங்குள்ள ஹோட்டல்கள் அலுவலகங்களில் ஒளிந்துகொண்டதாக ஈரான் குற்றம்சாட்டியது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி வெளியிட்டுள்ள பதிவில், "போர் ஆரம்பித்த நாளில் இருந்தே அமெரிக்க வீரக்கள் மேற்காசிய மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் மேற்காசிய நாடுகளில் உள்ள ராணுவத் தளங்களில் இருந்து தப்பி ஓடி அங்குள்ள ஹோட்டல்களில்,விடுதிகளிலும் அலுவலகங்களிலும் ஒளிந்துளனர். அவர்களுக்கு ஹோட்டல்களில் தங்க அனுமதி வழங்கக்கூடாது. மீறி அனுமதி அளித்தால் ஹோட்டல்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்..

