US Slaps Economic Sanctions on 40 Chinese Shipping Firms
Hengli Petrochemical refinery, China web

சீனாவின் 40 கப்பல் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை.. அமெரிக்கா அதிரடி.!

ஈரான் எண்ணெய் விவகாரம் தொடர்பாக, சீனாவைச் சேர்ந்த ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் 40 கப்பல் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
Published on

டிரம்ப் நிர்வாகம், சீனாவைத் தளமாகக் கொண்ட ஒரு பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதும், ஈரானிய எண்ணெயைக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ள சுமார் 40 கப்பல் நிறுவனங்கள் மற்றும் டேங்கர்கள் மீதும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

ட்ரம்ப்
ட்ரம்ப்x page

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிய விவகாரத்தில் இந்த நடவடிக்கையை ட்ரம்ப் அரசு எடுத்துள்ளது. ஈரானின் முக்கிய வருவாய் ஆதாரமாக விளங்கும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முற்றிலும் முடக்கும் நோக்கில் அமெரிக்கா, பொருளாதார தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. ஹார்முஸ் நீரிணைப் பகுதியை கைப்பற்ற முயற்சித்து வரும் அமெரிக்கா, தற்போது விதித்துள்ள பொருளாதார தடை ஈரான் மற்றும் சீனாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Kpler என்ற பகுப்பாய்வு நிறுவனத்தின் 2025 தரவுகளின்படி, ஈரானிலிருந்து அனுப்பப்படும் எண்ணெயில் 80%-க்கும் அதிகமானதை சீனா வாங்குகிறது.

US Slaps Economic Sanctions on 40 Chinese Shipping Firms
ஈரான் அமெரிக்கா பேச்சுவார்த்தை.. ”பாகிஸ்தான் பொருத்தமான நாடல்ல” - ஈரான் எம்பி காட்டம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com