us senator lindsey graham warns india china and brazil
மோடி, புதின், ஜின்பிங், லிண்ட்சேஎக்ஸ் தளம்

”ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால்..” - இந்தியா, சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு உதவியதற்காக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைத் தண்டிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 100 சதவீத வரியை விதிப்பார் என்று அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் எச்சரித்துள்ளார்.
Published on

ரஷ்யாவிடமிருந்து இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய்யை வாங்கி வருகின்றன. இதன்மூலம், உக்ரைன் போரை ரஷ்யா மூன்று ஆண்டுகளாகச் சமாளித்து வருகிறது. இது, அமெரிக்காவிற்குப் பிடிக்காததால் அந்த நாடு ரஷ்யாவை மறைமுகமாக எச்சரித்து வருகிறது. தவிர, ரஷ்யாவின் ஏற்றுமதிகளைப் பெறுபவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதாவது, ரஷ்ய ஏற்றுமதிகளைப் பெறும் இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் மீது 100% இரண்டாம் நிலை வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார். ஆயினும், தற்காலிகமாக 50 நாட்கள் கெடு விதித்துள்ளார். இதற்கிடையே, நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே, ”பிரேசில், சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால், இரண்டாம் நிலை வரிவிதிப்புகளால் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும். அதேநேரத்தில், உக்ரைனில் போரை நிறுத்த ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என சீனா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைக் கேட்டுக் கொண்டார்.

us senator lindsey graham warns india china and brazil
புதின், மோடி, ஜின்பிங்எக்ஸ் தளம்

இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு உதவியதற்காக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைத் தண்டிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 100 சதவீத வரியை விதிப்பார் என்று அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் எச்சரித்துள்ளார்.

us senator lindsey graham warns india china and brazil
இந்தியா, சீனாவுக்கு 100% வரி.. ட்ரம்பைத் தொடர்ந்து நேட்டோ எச்சரிக்கை

இதுகுறித்து அவர், ”ரஷ்ய எண்ணெய்யை வாங்கும் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் மீது ட்ரம்ப் வரிகளை விதிக்கப் போகிறார். அந்த மூன்று நாடுகளும் மலிவான ரஷ்ய எண்ணெய்யில் சுமார் 80 சதவீதத்தை வாங்குகின்றன. அதுதான் புடினின் போர் இயந்திரத்தைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது. எனவே, அதிபர் ட்ரம்ப் அந்த நாடுகள் அனைத்திற்கும் 100 சதவீத வரியை விதிக்கப் போகிறார். புடினுக்கு உதவியதற்காக அவர்களைத் தண்டிப்பார். சீனா, இந்தியா மற்றும் பிரேசிலுக்கு நான் சொல்வது இதுதான். இந்தப் போர் தொடர அனுமதிக்க நீங்கள் மலிவான ரஷ்ய எண்ணெய்யை தொடர்ந்து வாங்கினால், நாங்கள் உங்களை கிழித்து எறிந்து உங்கள் பொருளாதாரத்தை நசுக்குவோம். இத்தகைய அறிவிப்பால் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் அமெரிக்கப் பொருளாதாரத்தை ஏற்பது அல்லது புடினுக்கு உதவுவது என இரண்டில் ஒரு தேர்வை எதிர்கொள்ள உள்ளன. உண்மையில், அவர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்” எனத் தெரிவித்த அவர், ரஷ்யாவையும் கடுமையாகச் சாடியுள்ளார்.

us senator lindsey graham warns india china and brazil
லிண்ட்சேஎக்ஸ் தளம்

புடின், தனக்குச் சொந்தமில்லாத நாடுகளை ஆக்கிரமிப்பதன்மூலம் முன்னாள் சோவியத் யூனியனை மீண்டும் உருவாக்க முயற்சிக்கிறார். மேலும் உங்கள் பொருளாதாரம் நசுக்கப்பட இருக்கிறது. நாங்கள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குகிறோம், எனவே புடினை எதிர்த்துப் போராட உக்ரைன் ஆயுதங்களைக் கொண்டிருக்கும்” என் எச்சரித்துள்ளார்.

us senator lindsey graham warns india china and brazil
பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் வரி | அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com