\
donald trump Decline Whats Indias Next Move
us and indiareuters

ட்ரம்பின் செல்வாக்கு சரிவு.. மாறும் அமெரிக்க அரசியல்.. இந்தியாவின் அடுத்தகட்ட வியூகம் என்ன?

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி பெற்றுள்ள வெற்றியைத் தொடர்ந்து, அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்த இந்தியா தனது வெளியுறவுக் கொள்கை அணுகுமுறையை விரிவுபடுத்த வேண்டும் என்கிறார்கள் வெளியுறவு நிபுணர்கள்.
Published on: 

2026 அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் (பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்) அதிபர் டொனால்டு ட்ரம்ப் சார்ந்துள்ள குடியரசுக் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. இரண்டு அவைகளையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இதற்கிடையே, அதிபர் ட்ரம்புடைய இரண்டாவது பதவிக்காலத்தின் பாதியில் நடைபெறும் இந்தத் தேர்தல் முடிவுகள், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை எந்தக் கட்சி கட்டுப்படுத்தும் என்பதைத் தீர்மானிக்கிறது. இதனால், அமெரிக்காவின் அரசியல் மாற்றங்களை குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி என்ற இரு பிரிவுகளாக மட்டும் பார்க்காமல், இரு கட்சிகளுக்குள்ளும் நிலவும் அரசியல் வேறுபாடுகளை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும் என்று வெளியுறவுத் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

donald trump
donald trumpreuters

ட்ரம்ப் நிர்வாகத்துடன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதுடன், எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பையும் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

1990 மற்றும் 2000-களில் இந்தியா பின்பற்றிய தூதரக அணுகுமுறையை மீண்டும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அமெரிக்க நாடாளுமன்றம், வர்த்தக நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், சிந்தனைக் குழுக்கள் உள்ளிட்ட அமைப்புகளுடன் உறவுகளை வளர்க்க வேண்டும் என்றும் வெளியுறவு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 2008ஆம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தம், இத்தகைய முயற்சிகளின் விளைவாகவே சாத்தியமானது எனச் சுட்டிக்காட்டுகின்றனர்.

modi, trump
modi, trumpretuers

குடியரசுக் கட்சியில் ட்ரம்பின் தேசியவாதக் கொள்கைகளும், ஜனநாயகக் கட்சியில் முற்போக்கு அரசியல் சக்திகளின் எழுச்சியும் அமெரிக்க அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. வர்த்தகம், குடியேற்றம், மனித உரிமைகள், ரஷ்யா உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியாவை விமர்சிப்பவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்கிறார்கள் வெளியுறவுத் துறை நிபுணர்கள். இந்திய அரசுடன் மட்டும் இந்த முயற்சிகளை நிறுத்திவிடாமல், அரசியல் கட்சிகள், வர்த்தக அமைப்புகள், குடிமைச் சமூகத்தினர் ஆகியோரும் அமெரிக்காவின் பல்வேறு தரப்பினருடன் தொடர்புகளை வலுப்படுத்த வேண்டும் எனக் கூறுகிறார்கள் வெளியுறவுத் துறை நிபுணர்கள்.