\
US Offers $20 Million for Iran's Nuclear Secrets Amid Rising Tensions
donald trumpreuters

பற்றி எரியும் ஈரான் விவகாரம்: ரகசியங்களை விற்றால் $20 மில்லியன் பரிசு - அமெரிக்கா அதிரடி!

ஈரானின் ரகசிய அணுசக்தி மையங்களை கண்டுபிடிக்க முடியவில்லையா அமெரிக்கா? $20 மில்லியன் பரிசு அறிவிப்பு.. அடுத்தடுத்து வெடிக்கும் மர்மம்!
Published on: 

செய்தியாளர் - M.மீரா

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது ராணுவத் தாக்குதலைத் தொடங்கியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் நீடித்து வருகிறது. 2025 ஜூன் மாதத்தில் நடத்தப்பட்ட "ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்" (Operation Midnight Hammer) என்ற கூட்டு ராணுவத் தாக்குதலில், ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்களான ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz) மற்றும் இஸ்பஹான் (Isfahan) ஆகிய இடங்களில் உள்ள அணு உலைகள் மற்றும் யுரேனியம் செறிவூட்டும் மையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக ட்ரம்ப் அறிவித்தார்.

Isfahan
Isfahan reuters

ட்ரம்பின் இந்தக் கூற்றை அமெரிக்க பாதுகாப்பு உளவுத்துறை (DIA) மற்றும் ஐநா-வின் சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) ஆகியவை ஏற்கவில்லை. அமெரிக்கத் தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முற்றிலுமாக அழிக்கவில்லை என்றும், அதன் அணுஆயுதத் தயாரிப்புத் திறனை சில மாதங்கள் மட்டுமே இது தாமதப்படுத்தியிருக்கக் கூடும் என்ற தகவலை அமெரிக்க உளவுத் துறையின் தகவல் வெளியே கசிந்தது.

ட்ரம்பின் முந்தைய முற்றிலும் அழித்தாச்சு என்ற கூற்றுக்கு மாறாக, தற்போது ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தல் நீடிப்பதை அமெரிக்காவின் தற்போதைய நடவடிக்கைகள் காட்டுகின்றன.

நடான்ஸ் அணுசக்தி மையத்திற்கு அருகில் மலைக்கு அடியில் அமைந்துள்ள மிகப்பாதுகாப்பான பிக்ஏக்ஸ் (Pickaxe Mountain) என்ற நிலத்தடி அணுசக்தி மையத்தை இன்னும் சில நாட்களில் அமெரிக்கா தாக்கக்கூடும் என்று ட்ரம்ப் அண்மையில் எச்சரித்திருந்தார்.

Natanz
Natanzreuters

இதனைத் தொடர்ந்து தற்போது ஈரானின் அணுசக்தி ரகசியங்களை பற்றிய தகவல்கள் தெரிவிப்பவர்களுக்கு 20 மில்லியன் டாலர், அதாவது சுமார் ரூ.170 கோடி வரை பரிசு வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறையின் 'Rewards for Justice' திட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஈரானின் அணுசக்தி மையங்கள், யுரேனியம் செறிவூட்டும் கருவிகள், விஞ்ஞானிகள் மற்றும் அணுசக்தி தொடர்பான முக்கியப் பொருட்கள் எங்கு உள்ளன என்ற தகவல்களை வழங்குபவர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்படும். தகவல் அளிப்பவர்களுக்கு ஈரானிலிருந்து பாதுகாப்பாக வெளியேற உதவியும் வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Natanz
Natanzreuters

ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழித்துவிட்டதாக ட்ரம்ப் தொடர்ந்து கூறி வரும் நிலையில், தற்போது அமெரிக்கா இவ்வளவு பெரிய தொகையைப் பரிசாக அறிவித்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த முழுமையான தகவல்களைப் பெற முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அமெரிக்காவால் ரகசிய மையங்களை கண்டுபிடிக்க முடியவில்லையா?

செயற்கைக்கோள்கள் மற்றும் மின்னணு உளவு அமைப்புகள் மூலம் அமெரிக்கா ஈரானை கண்காணித்தாலும், அதற்குச் சில தொழில்நுட்ப எல்லைகள் (Limitations) உள்ளன.

ஈரான் தனது அணுசக்தி மையங்களை மலைகளுக்கு அடியிலும், பூமிக்கு அடியில் நூற்றுக்கணக்கான அடிகள் ஆழத்திலும் (உதாரணமாக, பிக்ஏக்ஸ் மலைப் பகுதி தளம்) அமைத்துள்ளது. இத்தகையFortified நிலத்தடி தளங்களை செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் துல்லியமாகப் பார்க்க முடியாது என்று கூறப்படுகிறது.

US Offers $20 Million for Iran's Nuclear Secrets Amid Rising Tensions
நாசாவையே மிரளவிட்ட அதிசயம்.. 22 ஆண்டுகள் பிரபஞ்சத்தை ஆண்ட Space Telescope!