\
donald trump
donald trumpreuters

ஆழம் தெரியாமல் காலை வைத்த ட்ரம்ப்.. ஈரான் மீது தாக்குதல்.. 47 பில்லியனைக் கடந்த செலவு!

அமெரிக்காவில் விரைவில் Midterm Elections வரவிருக்கும் நிலையில், இந்த வரலாறு காணாத போர்ச் செலவுகள் அதிபர் டொனால்டு ட்ரம்பின் அரசியல் செல்வாக்கைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நடந்து வரும் போருக்கான செலவு 47 பில்லியன் டாலர்களைக் (இந்திய மதிப்பில் ரூ4 லட்சம் கோடி) கடந்துள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் (Pentagon) நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ள புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது கடந்த ஜூலை மாதம் அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்ட மதிப்பீட்டைவிட 25 சதவீதத்திற்கும் அதிகம் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

iran war
iran war reuters

இந்த வருடத் தொடக்கத்தில் (பிப்ரவரி 2026) அதிபர் டொனால்டு ட்ரம்ப் இஸ்ரேலுடன் இணைந்து இந்தப் போரைத் தொடங்கியபோது, இது மிகக் குறுகிய காலத்தில் முடிவடைந்துவிடும் என்றே கணிக்கப்பட்டது. ஆனால், தற்போது போரின் செலவுகள் கட்டுப்பாடின்றி உயர்ந்து அமெரிக்க அரசுக்கு பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

போரில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள், குண்டுகள் மற்றும் பாதுகாப்புத் தளவாடங்களை மீண்டும் நிரப்ப மட்டும் $29 பில்லியன் டாலர் தேவைப்படுகிறது. மேலும், போரின்போது இழந்த ராணுவ உபகரணங்கள், விமானங்கள் மற்றும் ட்ரோன்களை மாற்றுவதற்கு 6 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாகத் தேவைப்படும் எனக் கூறப்படுகிறது.

iran war
iran war reuters

விமானங்களை இயக்குவது, சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு செயல்பாட்டுச் செலவுகளும் இந்த மதிப்பீட்டில் அடங்கும். மேலும், மத்திய கிழக்கில் ஈரானிய தாக்குதல்களால் சேதமடைந்த அமெரிக்க ராணுவத் தளங்களின் மறுசீரமைப்புச் செலவுகள் இன்னும் இந்த கணக்கில் சேர்க்கப்படவில்லை. இதனால் உண்மையான ஒட்டுமொத்த செலவு இதைவிட மிக அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தப் போர் உலகளவில் கச்சா எண்ணெய் விலையையும், எரிசக்தி செலவுகளையும் பெருமளவு உயர்த்தியுள்ளது. அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிக்க இது ஒரு முக்கியக் காரணமாக மாறியுள்ளது. மக்களின் ஆதரவில்லாத, தேவையற்ற போரினால் அமெரிக்க மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

அமெரிக்காவில் விரைவில் Midterm Elections வரவிருக்கும் நிலையில், இந்த வரலாறு காணாத போர்ச் செலவுகள் அதிபர் டொனால்டு ட்ரம்பின் அரசியல் செல்வாக்கைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

donald trump
மத்திய கிழக்கில் விரிவடையும் போர்: எகிப்தை மிரட்டும் ஹவுதி ஏவுகணைகள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com