\
US midterm elections i feel foolish says Elon Musk in regret
Elon MuskReuters

இடைக்கால தேர்தல்; ரூ4000 கோடி செலவு.. முட்டாளாக உணர்கிறேன் - எலான் மஸ்க் வேதனை

மீண்டும் ஒருமுறை இந்த வாய்ப்பு கிடைத்தால், இவ்வளவு பணத்தைச் செலவழித்திருக்க மாட்டேன்.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், அக்கட்சியின் வேட்பாளர்களுக்கு அதிக பணம் செலவழித்தது குறித்து எலான் மஸ்க் வருத்தம் தெரிவித்துள்ளார்.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க், இந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும், டெக்சாஸ் மாகாணத்தை குடியரசுக் கட்சியின் வசமே தக்கவைக்கவும் சுமார் 500 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.4,000 கோடிக்கும் மேல்) செலவிட்டதாகக் கூறப்படுகிறது.

craig abbott & Gina Hinojosa
craig abbott & Gina Hinojosa

ஆனால், தேர்தல் முடிவுகள் அவருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளன. ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெற்றி பெற்றதுடன், டெக்சாஸ் ஆளுநர் தேர்தலிலும் குடியரசுக் கட்சியின் கிரெக் அபாட்டை (craig abbott) தோற்கடித்து ஜினா ஹினோஜோசா (Gina Hinojosa)  வெற்றி பெற்றார்.

இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் நடத்திய டீல்புக் மாநாட்டில் காணொலி வாயிலாகப் பேசிய மஸ்க், இவ்வளவு பணத்தைச் செலவழித்தும் எதிர்பார்த்த பலன் கிடைக்காததால் தன்னை முட்டாளாக உணர்வதாகத் தெரிவித்தார்.

மேலும், மீண்டும் ஒருமுறை இந்த வாய்ப்பு கிடைத்தால், இவ்வளவு பணத்தைச் செலவழித்திருக்க மாட்டேன் என்றும் கூறினார்.

இதற்கிடையே, தனது செயற்கை நுண்ணறிவு (AI) திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், ஆந்த்ரோபிக் நிறுவனம் ஸ்பேஸ்எக்ஸிடம் இருந்து கணினி சேவைகளை வாடகைக்கு எடுப்பதைத் தொடரும் என்றும், கூடுதலாக 10 ஜிகாவாட் கணினித் திறனைப் பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

US midterm elections i feel foolish says Elon Musk in regret
கையில் அணு ஆயுத பெட்டி.. பின்னால் கடற்படை.. உச்சிமாநாட்டில் புதின் Entry!