us girl 19 dies after trying viral dusting challenge
ரென்னா ஓ ரூர்க்எக்ஸ் தளம்

அமெரிக்கா |வைரல் சேலஞ்சில் ஈடுபட்ட 19 வயதுக்குப் பெண் நேர்ந்த சோகம்!

அமெரிக்காவில் சமூக ஊடகங்களில் வைரலான 'டஸ்டிங்' சவாலை முயன்ற 19 வயது இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Published on

அமெரிக்காவில், சமூக ஊடகங்களில் அதிக பார்வையாளர்களைப் பெறுவதற்காக 'டஸ்டிங்' மற்றும் 'குரோமிங்' என்றும் அழைக்கப்படும் ஒரு சவால் முன்வைக்கப்படுகிறது. டஸ்டிங் என்பது கணினி கீபோர்டை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் ஸ்ப்ரேயை உள்ளிழுத்து சுவாசிக்கும் ஒரு சவாலாகும். இந்த சவாலை, அரிசோனாவைச் சேர்ந்த ரென்னா ஓ ரூர்க் என்ற 19 வயது இளம்பெண்ணும் முயற்சி செய்தார். இதற்காக அவர், தன் பெற்றோருக்குத் தெரியாமல் ஆன்லைனில் ஏரோசல் கீபோர்டு கிளீனரை ஆர்டர் செய்துள்ளார். பின்னர், இந்த சவாலை முயற்சி செய்வதற்காக, ஸ்ப்ரேயை சுவாசித்த ரென்னாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. கடந்த 1 வாரம் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மூளைச்சாவு ஏற்பட்டு நேற்று உயிரிழந்தார்.

அவருடைய மரணம் தொடர்பாக ரென்னாவின் தந்தை, " ‘நான் ஒரு நாள் பிரபலமாவேன், நீங்களே பாருங்கள்’ என்று ரென்னா தன்னிடம் அடிக்கடி கூறுவாள். ஆனால் அவள் இப்படித் தனது மரணத்தின் மூலம் பிரபலமாவாள் என்று ஒருபோதும் நினைக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

us girl 19 dies after trying viral dusting challenge
ரென்னா ஓ ரூர்க்எக்ஸ் தளம்

இதுபோன்ற ஸ்ப்ரேக்களை வாங்க எந்த அடையாள அட்டையும் தேவையில்லை என்பதால் குழந்தைகளுக்குக்கூட இது எளிதில் கிடைக்கிறது. எனவே, அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். தங்கள் மகளுக்கு நேர்ந்தது யாருக்கும் நேரக் கூடாது” என ரென்னாவின் தாய் தெரிவித்துள்ளார்.

ரசாயனங்களை உள்ளிழுப்பது தற்காலிகமாக போதையை உணரவைக்கும். அதேவேளையில், அது விரைவாக மரணத்திற்கு வழிவகுக்கும். அவர்கள் இந்த ரசாயனங்களை உள்ளிழுக்கும்போது, ​​அது உண்மையில் அவர்களின் நுரையீரலிலும் உடலின் மற்ற பகுதிகளிலும் உள்ள ஆக்ஸிஜனை மாற்றிவிடும். இது கல்லீரல் செயலிழப்பு, இதய செயலிழப்பு, நுரையீரல் நோய் ஆகியவற்றை ஏற்படுத்தும்” என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

us girl 19 dies after trying viral dusting challenge
தனியார் பாலில் ரசாயனம்.. குழந்தைகளுக்கு கேன்சர்.. அமைச்சர் விடும் அபாய எச்சரிக்கை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com