\
US FAA ends nationwide ground stop on flights
அமெரிக்காவில் ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட விமானம்REUTERS

25 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்காவில் நடந்த சம்பவம்.. ரத்தான 4,700 விமானங்கள்!!

அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தின் Telecommunication network-ல் ஏற்பட்ட சிக்கல் காரணமாக நாடு முழுவதும் சுமார் 4,700-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அப்படி அந்த வலையமைப்பில் ஏற்பட்ட பாதிப்பு என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்...
Published on: 

அமெரிக்காவின் எல்3 ஹாரிஸ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம்தான் விமானங்களின் தொலைத்தொடர்பு நெட்வொர்க்கை மேற்பார்வை செய்து வருவதாக தெரிகிறது. இதில், விமானப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய தொலைத்தொடர்பு அலைவரிசையில் சிக்கல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது, விமானிகளுடன் கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்கள் தொடர்பு கொள்வதற்கான அலைவரிசையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலால் விமானிகளுடன் தொடர்பு கொள்ள முடியாத நெருக்கடியான சூழல் உருவாகி, அனைத்து வகையான விமானங்களின் புறப்பாடும் ரத்து செய்யப்பட்டது. குறிப்பாக விமானங்கள் தரையிறங்குவதிலேயே அதிக பாதிப்புகள் இருந்ததால், அனைத்து விமானங்களின் புறப்பாட்டையும் ரத்து செய்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவில் அடுத்தடுத்து ரத்தான விமானங்கள்
அமெரிக்காவில் அடுத்தடுத்து ரத்தான விமானங்கள்REUTERS

அமெரிக்காவின் கோரிக்கைக்கு இணங்க ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், பெல்ஜியம், ஆஸ்திரியா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புறப்படும் விமானங்களும் நிறுத்திவைக்கப்பட்டதாக தெரிகிறது. தொடக்கத்தில் விமானங்களின் புறப்பாடு தாமதம் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில விமானங்களின் தரையிறக்கம் வேறு பகுதிகளுக்கு திருப்பிவிடப்பட்டதாக தெரிகிறது. ஆனால், விமானங்கள் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டதால் நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

2001-ஆம் ஆண்டுக்குப் பிறகு சுமார் 25 ஆண்டுகள் கழித்து இப்படியொரு நாடு தழுவிய தடை, அதாவது விமானங்கள் தரையிறங்குவது நிறுத்தப்பட்டது இதுவே இரண்டாவது முறை என இச்சம்பவத்தை குறிப்பிட்டிருக்கிறது ராய்ட்டர்ஸ். இந்த நிலைக்குக் காரணம் இணையவழித் தாக்குதலோ அல்லது ஏஐ உடன் தொடர்புடைய சம்பவமோ கிடையாது என திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் அதிபர் ட்ரம்ப். நிலைமை இன்னும் சீராகாததால் இன்றும் விமானங்கள் பல ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் விரைவில் சேவைகள் சீராகும் என்பதே பயணிகளுக்கு விமானப் பணியாளர்கள் இப்போதைக்கு அளிக்கக் கூடிய நம்பிக்கையாக உள்ளது.

US FAA ends nationwide ground stop on flights
இந்தியாவில் அதிகம் பேர் காசநோயால் பாதிப்பு.. WHO எச்சரிக்கை!!