\
WHO Warns: Tuberculosis Remains the World’s Deadliest Disease
Tuberculosis AI

இந்தியாவில் அதிகம் பேர் காசநோயால் பாதிப்பு.. WHO எச்சரிக்கை!!

காசநோய் என்பது வெறும் தொற்றுநோய் மட்டுமல்ல, அது ஒரு தீவிரமான சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சனையாக உருவெடுத்துள்தை உலக சுகாதார அமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
Published on: 

உலக அளவில் ஒரே ஒரு தொற்றுநோயால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்றால், அதற்கு இன்றும் காசநோய்தான் முதன்மைக் காரணமாக இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. அந்த அமைப்பின் அறிக்கையில் முக்கிய சாராம்சங்களை பார்க்கலாம்..

Reuters

காசநோய் என்பது வெறும் தொற்றுநோய் மட்டுமல்ல, அது ஒரு தீவிரமான சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சனையாக உருவெடுத்துள்தை உலக சுகாதார அமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உலக அளவிலான மொத்த பாதிப்பில் கால் பங்கு இந்தியாவிலும், மூன்றில் ஒரு பங்கு தென்கிழக்கு ஆசியாவிலும் பதிவாகியிருப்பது, இப்பிராந்தியத்தில் காசநோயின் அபாயம் இன்னும் குறையவில்லை என்பதையே காட்டுகிறது. குறிப்பாக, ஊட்டச்சத்துக் குறைபாடு, நீரிழிவு நோய், மது மற்றும் புகைபிடித்தல் போன்ற வாழ்வியல் காரணிகளே காசநோய் பரவுவதற்கு முக்கியத் தூண்டுகோலாக உள்ளன.

எனவே, நோய்க்குச் சிகிச்சை அளிப்பதோடு, மக்களின் ஊட்டச்சத்து மற்றும் வாழ்வியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் அவசியமாகிறது. மறுபுறம், காசநோய் ஒழிப்புப் பணிகளுக்குத் தேவையான நிதியுதவியில் சர்வதேச நாடுகளின் பங்களிப்பு குறைந்து வருவது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இதனால், சிகிச்சை பெறும் பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்படுகின்றன. சுருக்கமாகக் கூறினால், வெளிநாட்டு நிதியை மட்டுமே நம்பியிருக்காமல், உள்நாட்டு நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து, நோயாளிகளின் மருத்துவச் செலவுச் சுமையைப் பூஜ்ஜியமாக்க வேண்டும் என்கிறது உலக சுகாதார அமைப்பு.

நோய் ஒழிப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தி 2030ஆம் ஆண்டுக்குள் காசநோய் பாதிப்பை ஒழிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது உலக சுகாதார அமைப்பு.

WHO Warns: Tuberculosis Remains the World’s Deadliest Disease
இமயமலைக் காடுகளில் இத்தனை அதிசயங்களா? இதுவரை கண்டறியப்படாத 5 புதிய தவளை இனங்கள் கண்டுபிடிப்பு!