சீனா - அமெரிக்காமுகநூல்
உலகம்
சீனாவின் மீது 2400 கோடி டாலர் அபராதம் விதித்த அமெரிக்க நீதிமன்றம்!
கொரோனா உண்மைகளை மறைத்த சீனாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் 2400 கோடி டாலர் அபராதம்!
கொரோனா வைரஸ் பரவல் குறித்த உண்மைகளை மறைத்தது மற்றும் முக்கியமான பாதுகாப்பு உபகரணங்களை பதுக்கிவைத்தது போன்ற குற்றங்களுக்காக சீனாவின் மீது அமெரிக்க நீதிமன்றம் 2400 கோடி டாலர் அபராதம் விதித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கிய 2020ஆம் ஆண்டு மிசெளரி மாகாண அரசின் தலைமை வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில் இப்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சீனாவின் சொத்துக்களை பறிமுதல் செய்து இந்த அபராதத் தொகையை வசூலிக்க மிசெளரி மாகாண அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், இந்தத் தீர்ப்பை சீன அரசு நிராகரித்துள்ளது. தங்களுக்கு எந்த வகையிலேனும் ஆபத்து ஏற்பட்டால் சர்வதேச சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீனா கூறியுள்ளது.