அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை
அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவைweb

அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை.. அதிரடியாக தீர்ப்பு வழங்கிய அமெரிக்க நீதிமன்றம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
Published on
Summary

அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் அதிபர் டிரம்ப் விதித்த வரிகளை சட்டவிரோதமாக அறிவித்து, அவற்றை உடனடியாக நீக்க உத்தரவிட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த தீர்ப்பு டிரம்ப் நிர்வாகத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய பொருட்கள் மீதான வரியை உயர்த்திய ட்ரம்ப்

அமெரிக்க அதிபரானது முதல் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் மிக முக்கியமாக பார்க்கப்படுவது , அவர் தற்போது வர்த்தகப் போரில் இறங்கி இருப்பதுதான்.. இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு நாடுகளுக்கு அதிக வரிகளை விதித்துள்ளார்.. அதில் குறிப்பாக இந்திய பொருட்கள் மீதான வரியை சமீபத்தில் 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது உலக நாடுகளிடயே பேசும்பொருளாகி உள்ளது..

இந்தியாவுக்கு மட்டுமில்லாமல் 60க்கும் மேற்பட்ட நாடுகள் மீதும் டிரம்ப் கடுமையான வரிகளை விதித்துள்ளார் என்பதேயாகும்.. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை என்றால் இப்படிதான் வரிகளை உயர்த்துவேன் என்று அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு நேரடியாகவே அறிககையும் விட்டிருந்தார்..

Trump
TRUMPpt

ட்ரம்ப் வரி விதிப்புகளை உடனடியாக நீக்கவும் - அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

இந்நிலையில், அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம், அவசரகால அதிகாரங்களின் கீழ் அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று தீர்ப்பளித்து உள்ளது. அத்துடன் அதிபர் டிரம்ப் அறிவித்த வரி விதிப்புகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பின் விளக்கம் என்ன?

அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறியிருப்பதாவது, ”டிரம்ப் தனது வர்த்தகப் போரின் ஒரு பகுதியாக ஏப்ரல் மாதத்தில் விதித்த "பரஸ்பர" வரிகள் அத்துடன் சீனா, கனடா மற்றும் மெக்சிகோவிற்கு எதிராக பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட மற்றொரு வரிகள். எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதிகள் உட்பட தனித்தனி சட்டங்களின் கீழ் டிரம்ப் விதித்த பிற வரிகளை இது பாதிக்காது.

india usa tariff updates
ட்ரம்ப், மோடிஎக்ஸ் தளம்

“அறிவிக்கப்பட்ட தேசிய அவசரநிலைக்கு பதிலளிக்கும் விதமாக பல நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிபருக்கு சட்டம் குறிப்பிடத்தக்க அதிகாரத்தை வழங்குகிறது.. ஆனால் இந்த நடவடிக்கைகளில் எதுவும் வெளிப்படையாக வரிகள் விதிக்கும் அதிகாரத்தை உள்ளடக்கவில்லை என்று அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது” என்று ராய்ட்டர்ஸ் மேற்கோள் காட்டியுள்ளது.. அதனால், சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறியதாக அந்தத் தீர்ப்பை நீதிமன்றம் கூறியது.

அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் கூறியது என்ன?

இது குறித்து அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் வாதிட்டபோது கூறியதாவது,” அமெரிக்காவின் தொடர்ச்சியான வர்த்தக பற்றாக்குறைகள் மற்றும் எல்லை தாண்டிய போதைப் பொருள் விற்பனை தொடர்பாக தேசிய அவசரநிலையை அறிவிப்பதன் மூலம் வரிகளை விதிப்பது நியாயம் என்றும் 1977 ஆம் ஆண்டு தடைகள் மற்றும் சொத்து முடக்கங்களுக்கு வரலாற்று ரீதியாகப் பயன்படுத்தப்பட்ட IEEPA சட்டத்தை டிரம்ப் பயன்படுத்தினார் என்றும் நீதிமன்றத்தில் வாதிட்டப்பட்டது..

50% வரி விதித்த டிரம்ப்; பதிலடி கொடுத்த மோடி!
50% வரி விதித்த டிரம்ப்; பதிலடி கொடுத்த மோடி!புதிய தலைமுறை

ஆனால் அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் ட்ரம்ப் நிர்வாகத்தின் கருத்தை நிராகரித்து, "காங்கிரஸ், IEEPA-வை இயற்றுவதில், அதன் கடந்த கால நடைமுறையிலிருந்து விலகி, அதிபருக்கு வரிகளை விதிக்க வரம்பற்ற அதிகாரத்தை வழங்க விரும்பியதாகத் தெரியவில்லை. காங்கிரஸ் சபைக்குத்தான் அந்த அதிகாரம் உள்ளது.. இது காங்கிரஸ் சபைக்கு வழங்கப்பட்ட ஒரு முக்கிய அதிகாரம் என்றும் தெரிவித்துள்ளது. இந்தச் சட்டம் வரிகளை விதிக்க அதிபருக்கு அதிகாரம் வழங்கவில்லை” என்று தெளிவாக கூறியது.

இந்நிலையில் அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை அக்டோபர் 14 ஆம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளது. டிரம்ப் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மறுபரிசீலனை கோருவதற்கு அவகாசமும் அளித்து உள்ளது.

தீர்ப்புக்கு பிறகு அதிபர் ட்ரம்ப் சொன்னது என்ன?

இந்த தீர்ப்பு வெளியான சில நிமிடங்களுக்குப் பிறகு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்தார்.. அதில், " இந்த தீர்ப்பு நாட்டிற்கு முழுமையான பேரழிவாக" இருக்கும் என்று கூறினார். தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பதிவிட்டவர், “ இந்த தீர்ப்பு மிகவும் பாரபட்சமானது" என்று தாக்கி எழுதினார். மேலும் உச்ச நீதிமன்றம் தனக்கு சாதகமாக தீர்ப்பளிக்குமாறு வலியுறுத்தினார். "இந்த வரிகள் எப்போதாவது நீக்கப்பட்டால், அது நாட்டிற்கு முழுமையான பேரழிவாக இருக்கும்" என்று டிரம்ப் தனது பதிவில் எழுதினார். "இதை நிலைநிறுத்த அனுமதித்தால், இந்த முடிவு உண்மையில் அமெரிக்காவை அழித்துவிடும்." என்றும் குறிப்பிட்டிருந்தார்..

ட்ரம்ப்
ட்ரம்ப்PT News

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் குஷ் தேசாய் கூறுகையில்,

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் குஷ் தேசாய் வெளியிட்ட அறிக்கையில், “ அதிபரின் வரிகள் அமலில் உள்ளன என்றும் இந்த விஷயத்தில் இறுதி வெற்றியை நாங்கள் எதிர்நோக்குகிறோம்" என்றும் தெரிவித்தார் என CNBC மேற்கோள் காட்டியது.

மேலும், டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் வரிகளை பெரிதும் நம்பியுள்ளார், வர்த்தக கூட்டாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கவும் திருத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களுக்கு அழுத்தம் கொடுக்கவும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் மையக் கருவியாக அவற்றைப் பயன்படுத்துகிறார். வரிகள் அவரது நிர்வாகத்திற்கு பொருளாதார சலுகைகளைப் பெற உதவியிருந்தாலும், அவை நிதிச் சந்தைகளில் நிச்சயமற்ற தன்மையையும் அதிகரித்துள்ளன. அரசியலமைப்பின் கீழ், வரிகள் மற்றும் கட்டணங்களை வெளியிடும் அதிகாரம் காங்கிரஸிடம் உள்ளது.

அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை
அமெரிக்காவிற்கு எதிராக உருவாகிறதா புதிய கூட்டணி? சந்திக்கப் போகும் 3 நாட்டுத் தலைவர்கள்!

ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, டிரம்பின் கட்டண நடவடிக்கைகளுக்கு எதிராக குறைந்தது எட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, அவற்றில் ஒன்று கலிபோர்னியா மாநிலத்தால் கொண்டுவரப்பட்டது என்றும் தெரிவித்தார்..

இந்த வழக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லும் வாய்ப்பு உள்ளதா?

அதனைத் தொடர்ந்து,”உலகளாவிய வர்த்தகத்தை மறுசீரமைக்கவும் அமெரிக்க தொழில்களைப் பாதுகாக்கவும் ஒரு வழியாக வரிகளை டிரம்ப் ஆதரித்தார். அமெரிக்கா பல தசாப்தங்களாக ஏற்றுமதி செய்ததை விட இறக்குமதி செய்ததுதான் அதிகம். அதனால் உற்பத்தி மற்றும் இராணுவத் தயார்நிலைக்கு ஏப்ரல் மாத வரிகள் அவசியம் என்று அவர் கூறினார்.

அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை
தொடர்ந்து குறிவைக்கப்படும் இந்தியா.. அமெரிக்கா செய்யும் அரசியல் என்ன? வெடித்த புதிய சர்ச்சை

சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் விதிக்கப்பட்ட கட்டணங்களை கட்டுப்படுத்தினாலும், பிற சட்ட அதிகாரிகளின் கீழ் விதிக்கப்பட்ட கட்டணங்களை அப்படியே விட்டுவிடுகிறது. நீதித்துறை மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்த வழக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com