US complaint Seized Iranian ship had missile chemicals from China
iran shipx page

பிடிபட்ட ஈரான் கப்பலில் ரசாயனம்.. சீனா உதவி செய்ததா? குற்றஞ்சாட்டும் அமெரிக்கா!

அமெரிக்கா - ஈரான் இடையே இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தையை நடத்த பாகிஸ்தான் தயாராகி வருகிறது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையை ஈரான் புறக்கணித்துள்ளது.
Published on

கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் கொடியுடன் சென்ற டூஸ்கா சரக்கு கப்பலை அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஸ்ப்ரூயன்ஸ் போர்க்கப்பல் வழிமறித்து, துப்பாக்கிச் சூடு நடத்தி கப்பலைச் செயலிழக்கச் செய்து, தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். பிடிபட்ட ஈரான் கப்பலில் சீன ரசாயனம் இருப்பதாக அமெரிக்கா பரபரப்பான குற்றச்சாட்டை வைத்துள்ளது.

அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர், இரண்டு வார காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அது நாளையுடன் முடிவுக்கு வருகிறது. தொடர்ந்து, போரை நிறுத்தும் பணியில் அமெரிக்கா - ஈரான் இடையே இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தையை நடத்த பாகிஸ்தான் தயாராகி வருகிறது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையை ஈரான் புறக்கணித்துள்ளது. அமெரிக்கா வைக்கும் கோரிக்கைகளும், கெடுபிடிகளுமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. தவிர, ஈரானுக்குச் சொந்தமான கப்பலைப் பிடித்து வைத்திருப்பதும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் கொடியுடன் சென்ற டூஸ்கா சரக்கு கப்பலை அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஸ்ப்ரூயன்ஸ் போர்க்கப்பல் வழிமறித்து, துப்பாக்கிச் சூடு நடத்தி கப்பலைச் செயலிழக்கச் செய்து, தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இது ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளை என ஈரான் கடுமையாக கண்டனம் தெரிவித்தது.

தவிர, இந்த கப்பலை அமெரிக்கா கைப்பற்றியதற்குப் பதிலடியாக ஈரானும் அமெரிக்காவிற்குச் சொந்தமான இரண்டு ராணுவக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பிடிபட்ட ஈரான் கப்பலில் சீன ரசாயனம் இருப்பதாக அமெரிக்கா பரபரப்பான குற்றச்சாட்டை வைத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க குடியரசுக் கட்சித் தலைவர் நிக்கி ஹேலி, “இந்த வார இறுதியில் ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா கைப்பற்றிய கப்பல், சீனாவிலிருந்து ஈரானுக்குச் சென்று கொண்டிருந்ததுடன், அது ஏவுகணைகளுக்கான இரசாயனப் பொருட்களைத் தொடர்புடையது. அதை நிறுத்துமாறு விடுக்கப்பட்ட தொடர்ச்சியான உத்தரவுகளை அது ஏற்க மறுத்தது. ஈரானின் ஆட்சியைத் தாங்கிப் பிடிக்க சீனா உதவுகிறது என்பதற்கு இது மற்றுமொரு உதாரணம். இது புறக்கணிக்க முடியாத ஒரு யதார்த்தம்” எனத் தெரிவித்துள்ளார்.

US complaint Seized Iranian ship had missile chemicals from China
பதிலுக்குப் பதில்.. அமெரிக்க ராணுவக் கப்பல்களைத் தாக்கிய ஈரான்.. பதற்றத்தில் மத்திய கிழக்கு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com