Iran attacked USAF E-3 Sentry destroyed  at Prince Sultan Airbase in Saudi Arabia
Iran attacked USAF E-3 Sentry destroyed at Prince Sultan Airbase in Saudi Arabiaweb

ராணுவ தளங்களை அடித்து நொறுக்கிய ஈரான்.. சீரமைக்க தவிக்கும் அமெரிக்கா?

ஈரான் தாக்குதல்களில் அமெரிக்கத் தளவாடங்கள் பெரும் சேதமடைந்துள்ளது. அவற்றைச் சீரமைக்க பில்லியன் கணக்கில் செலவாகலாம் என்று கூறப்படுகிறது.
Published on

ஈரான் மீதான அமெரிக்கா , இஸ்ரேல் தாக்குதல்கள் பிப்ரவரி 28 அன்று தொடங்கியது. போர் தொடங்கியதிலிருந்து, வளைகுடா பகுதியில் அமெரிக்காவுக்கு உதவி செய்த பல நாடுகளின் மீது தாக்குதல்களை நடத்தியது ஈரான். சேமிப்புக் கிடங்குகள், செயல்பாடுகளை நிர்வகிக்கும் கட்டளை மையங்கள், விமான தளங்கள் மற்றும் செயற்கைக்கோள் தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தப்படும் அமைப்புகள் உள்ளிட்ட குறைந்தது ஏழு நாடுகளில் உள்ள முக்கியமான அமெரிக்காவின் இராணுவத் தளங்களைத் தாக்கியுள்ளது ஈரான் ராணுவம் .

USAF) airmen at the Ali Al Salem airbase
USAF) airmen at the Ali Al Salem airbaseweb

மேலும், இராணுவ நகர்வு மற்றும் கண்காணிப்புக்கு இன்றியமையாத ஓடுபாதைகள், ரேடார் அமைப்புகள் மற்றும் சில விமானங்களையும் சேதப்படுத்தியது ஈரான் . ஒரு சந்தர்ப்பத்தில், சக்திவாய்ந்த அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் இருந்தபோதிலும், ஒரு பழைய ஈரானிய F-5 ரக போர் விமானத்தில் ஊடுருவி தாக்குதலை நடத்தியது.

Iran attacked USAF E-3 Sentry destroyed  at Prince Sultan Airbase in Saudi Arabia
ஈரான் போர் நிறுத்தம்.. அமெரிக்க இராணுவத்தில் ஆயுத நெருக்கடி காரணமா?

ஈரான் நடத்திய தாக்குதல்களால் உண்மையில் எவ்வளவு சேதம் ஏற்பட்டது என்பது குறித்த முழு விவரங்களையும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை இன்னமும் வெளியிடவில்லை. அப்பகுதியில் இராணுவ நடவடிக்கைகளைக் கையாளும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு கூட, சேதத்தின் அளவு குறித்துக் கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ளது .

iran war
iran war web

வெளிப்படைத்தன்மை இல்லாததால் சில குடியரசுக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கோபமும் விரக்தியும் அடைந்துள்ளனர். பல வாரங்களாகக் கேட்டு வந்தபோதிலும், தங்களுக்கு இன்னும் முழுமையான விவரங்கள் தெரியவில்லை என்றும் கூறிவருகிறது என்று NBC செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மோதல் தொடங்கிய முதல் 3 வாரங்களில் மட்டும் ஈரானின் ஏவு​கணை மற்றும் டிரோன் தாக்​குதல்​களால் அமெரிக்​கா​விற்கு சுமார் 1.4 பில்​லியன் டாலர் முதல் 2.9 பில்​லியன் டாலர் இழப்பு ஏற்பட்​டுள்​ள​தாக the wall street journal செய்தி வெளியிட்டிருந்தது.

பாரசீக வளைகுடாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களும் உபகரணங்களும், ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டதை விட சமீபத்திய ஈரானியத் தாக்குதல்களால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று NBC செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இதுவரை பகிரங்கமாகப் பகிரப்பட்ட சேதத்தின் அளவைவிட மிகவும் அதிகமான சேதம் ஏற்பட்டிருக்கிறது என்றும், அதைச் சீரமைக்க பல பில்லியன் டாலர்கள் செலவாகும் எனவும் NBC செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

Iran attacked USAF E-3 Sentry destroyed  at Prince Sultan Airbase in Saudi Arabia
”ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தயார்” - இஸ்ரேல் அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு.!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com