\
UFO flying at 1,800mph spotted over sensitive US site
spaceReuters

3 ஆயிரம் கி.மீ வேகம்.. மின்னலாக பறந்த மர்மப் பொருள்? அச்சம் அடைந்த அமெரிக்கா!

ஒரு முக்கோண வடிவ UFO அதிவேகமாக பறந்திருப்பதாக அமெரிக்கா தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on: 

செய்தியாளர் - கார்த்திகேயன்

பென்டகன் என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை, கடந்த 23-ஆம் தேதி அன்று, சமூக வலைதளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டது. அந்த பதிவில், FBI-யின் சாட்சிய அறிக்கையும், பென்டகனின் AARO அமைப்பின் விசாரணை குறிப்பும் இடம்பெற்றிருந்தது. அந்த அறிக்கை மற்றும் விசாரணை குறிப்பில் கூறப்பட்டிருந்த தகவல்கள், ஒட்டுமொத்த உலகத்தையும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

space
spaceReuters

அதாவது, அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு ரகசிய பாதுகாப்பு தளத்திற்கு அருகே, ஒரு மர்ம பொருள் வானில் காணப்பட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. முக்கோண வடிவத்தில் இருந்த அந்த பொருளின் இறக்கை, சுமார் 9 முதல் 15 அடி அகலம் இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, அந்த பொருள் மலைமுகட்டுக்கு மேலே செங்குத்தாக உயர்ந்து, சுமார் 300 அடி உயரத்தில் சில நேரம் அசைவின்றி நின்றதாகவும், பின்னர் மிக வேகமாக பறந்து, மறைந்ததாகவும், அறிக்கைகள் கூறுகின்றன. குறிப்பாக, இந்த பொருள் மணிக்கு சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பறந்தது என்றும், இது பறந்தபோது சத்தமும் கேட்கவில்லை, புகையும் வரவில்லை என்று சாட்சிகள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்த பொருள் பறந்தபோது எந்தவொரு புகைப்படங்களையும், வீடியோக்களையும், அந்த சாட்சிகள் பதிவு செய்து வைக்கவில்லை. தற்போது வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள், வெறும் விளக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது. இப்படியான ஒரு மர்ம பொருள் வானில் பறந்ததாக கூறப்படும் செய்தி, வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா என்ற கேள்வியை பொதுமக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

பொதுவாக, 15 அடி அகலம் வரை இருக்கக் கூடிய ஒரு பொருள் வானில் 3000 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்தது மனித தொழில்நுட்பங்களால் சாத்தியம் ஆகக் கூடிய ஒன்று தான். ஆனால், சத்தம், புகை எதையும் வெளியிடாமல், வானில் ஒரே இடத்தில் ஒரு பொருள் மிதந்ததாக கூறப்படுவது, மனிதர்களால் சத்தியமில்லாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. எனவே, அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் சாட்சியங்கள், ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், அது பெரும் வரலாற்று திருப்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

UFO flying at 1,800mph spotted over sensitive US site
கைப்பற்றப்பட்ட காவல் நிலையம்.. பாகிஸ்தான் ராணுவக் கேப்டன் கொ*ல.. தாண்டவம் ஆடும் பலுச் விடுதலைப்படை?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com