அமெரிக்கா| கடையில் பணம் கொடுக்காமல் பொருட்களை எடுத்துச் செல்ல முயன்ற இந்திய மாணவிகள் 2 பேர் கைது!

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் மரணமும், இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்திய மாணவிகள் இரண்டு பேரை அமெரிக்க போலீஸ் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
america
americatwitter

ஆந்திரப் பிரதே மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த பவ்யா லிங்கனகுண்டா என்ற 20 வயது மாணவி ஒருவரும், குண்டூரைச் சேர்ந்த யாமினி வல்கல்புடி என்ற 22 வயது மாணவி ஒருவரும் அமெரிக்காவின் நியூஜெர்சியில் உயர்கல்வி படித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் ஹோபோகன் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த மார்ச் 19ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் ஹோபோகன் நகர போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு மாணவிகளையும் கைதுசெய்து விசாரித்தனர். அதில் ஒரு மாணவி, ”காசு கொடுக்காத பொருளுக்கு இருமடங்கு பணத்தைத் தந்துவிடுகிறேன்” எனவும், மற்றொரு மாணவி, ”இதுபோன்று இனி செய்ய மாட்டேன்” என்றும் கூறியுள்ளார். இருப்பினும் தவறு செய்திருப்பது நிரூபணம் ஆகி உள்ளதால், இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என காவல் துறை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், இந்தக் குற்றச்சாட்டால் இரு மாணவிகளின் கல்வி, வேலை, விசா உள்ளிட்டவற்றில் பிரச்னை ஏற்படலாம் எனக் காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்த சம்பவம் கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தை நினைவுபடுத்துவதாகவும் உள்ளது எனக் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். அந்த ஆண்டு, டென்னிசியில் உள்ள வால்மார்ட் கடையில் இருந்து $ 4,500 மதிப்புள்ள 155 சவரன்களை இரண்டு இந்தியப் பெண்கள் திருடிச் சென்றதாக வழக்கு பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இறந்தவரை வங்கிக்கு அழைத்துவந்து கடன் பெற முயன்ற பெண்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. வைரல் வீடியோ!

america
தொடரும் சோகம்: அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் மரணம்.. நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 10 பேர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com