தொடரும் சோகம்: அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் மரணம்.. நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 10 பேர்!

அமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவர் மரணமடைந்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
model image
model imagetwitter

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் மரணமும், இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தற்போது இந்திய மாணவர் ஒருவர் மரணமடைந்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் கிளெவ்லேண்ட் நகரில் படித்து வந்தவர் உமா சத்யசாய் கத்தே. இந்திய மாணவரான இவர், திடீரென மரணமடைந்து கிடந்துள்ளார். இதனை நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. அவருடைய இறப்புக்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்து உள்ள தூதரகம், கத்தேவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளது.

மேலும் அவருடைய உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான உதவிகளையும் செய்து தர தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளது. இதுபற்றிய போலீசாரின் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

model image
அமெரிக்காவில் என்னதான் நடக்கிறது!! தொடரும் இந்தியர்களின் மரணங்கள்.. இதுவரை இறந்தவர்கள் யார் யார்?

2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர்கள், இந்தியர்கள் மரணம் அடைவது இது 10-வது நிகழ்வு ஆகும்.

இதையும் படிக்க: இணைக்கப்படாத பான்-ஆதார்: 9 ஆயிரம் பேருக்கு சம்பளமாக ரூ.1 மட்டுமே வரவு..அதிர்ச்சியில் மும்பைநகராட்சி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com