\
Two Indian origin Ministers appointed in Andy Burnhams Cabinet
Kanishka Narayan, Lisa Nandyx page

பிரிட்டனின் புதிய அமைச்சரவை.. இரண்டு இந்தியர்களுக்கு இடம்.. யார் இவர்கள்?

பிரிட்டன் அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக, செயற்கை நுண்ணறிவு (AI) துறைக்குக் கேபினெட் (அமைச்சரவை) அந்தஸ்து வழங்கப்பட்டு, அதில் கனிஷ்கா நாராயண் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Published on

பிரிட்டனில், கீர் ஸ்டார்மர் பதவி விலகிய பிறகு நடைபெற்ற தொழிலாளர் கட்சித் தலைவருக்கான தேர்தலில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும் ஆதரவோடு (379 எம்பிக்கள்) ஆண்டி பர்ஹாம் பிரதமராகப் பதவியேற்றார். இந்த நிலையில், பிரிட்டனில் பிரதமர் ஆண்டி பர்ஹாம் தலைமையிலான புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் இடம்பிடித்துள்ளனர்.

பிரிட்டனில், கீர் ஸ்டார்மர் பதவி விலகிய பிறகு நடைபெற்ற தொழிலாளர் கட்சித் தலைவருக்கான தேர்தலில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும் ஆதரவோடு (379 எம்பிக்கள்) ஆண்டி பர்ஹாம் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் மூன்றாம் சார்லஸைச் சந்தித்து, புதிய ஆட்சியை அமைப்பதற்கான முறைப்படி ஒப்புதலைப் பெற்றார். இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 20ஆம் தேதி 59-ஆவது பிரிட்டனின் புதிய பிரதமராகத் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஆண்டி பர்ஹாம் (Andy Burnham) பதவியேற்றார். இந்த நிலையில், அவரது தலைமையிலான பிரிட்டனின் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் இடம்பிடித்துள்ளனர்.

Kanishka Narayan
Kanishka Narayanfacebook

அதில் ஒருவர், கனிஷ்கா நாராயண் (Kanishka Narayan). பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், தனது 12ஆவது வயதில் குடும்பத்துடன் பிரிட்டனுக்குக் குடிபெயர்ந்தார். இவர், பிரிட்டனில் செயற்கை நுண்ணறிவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டன் அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக, செயற்கை நுண்ணறிவு (AI) துறைக்குக் கேபினெட் (அமைச்சரவை) அந்தஸ்து வழங்கப்பட்டு, அதில் கனிஷ்கா நாராயண் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Two Indian origin Ministers appointed in Andy Burnhams Cabinet
உறுதியாய்ப் பதிவிட்ட ட்ரம்ப்.. பிரிட்டன் பிரதமர் பதவி விலகல்.. அடுத்த தலைவர் யார்?

அடுத்து, லிசா நந்தி (Lisa Nandy)என்பவர், கலாசாரம், ஊடகம், விளையாட்டு மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்தின் கொல்கத்தா மண்ணிலிருந்து சென்ற இவரது குடும்பம், முந்தைய அரசிலும் அமைச்சராகப் பணியாற்றியவர் ஆவார். புதிய பிரதமர் ஆண்டி பர்ஹாம் தலைமையிலான அரசிலும் தனது இலாகாவைத் தற்போது தக்கவைத்துக் கொண்டுள்ள இவர், கூடுதலாக 'டிஜிட்டல் சேவைகள்' பொறுப்பையும் பெற்றுள்ளார். தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் லிசா நந்தி விளங்குகிறார்.

Lisa Nandy
Lisa Nandyx page

பிரிட்டனின் தொழில்நுட்ப வளர்ச்சியை முன்னெடுக்கும் வகையில் கனிஷ்கா நாராயணிடம் அத்துறையை ஒப்படைத்திருப்பது அந்நாட்டின் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல, டிஜிட்டல் சேவைகளை உள்ளடக்கிய விரிவான கலாசாரத் துறையை லிசா நந்தியிடம் ஒப்படைத்திருப்பது அந்நாட்டில் இந்திய வம்சாவளியினரின் செல்வாக்கை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

Two Indian origin Ministers appointed in Andy Burnhams Cabinet
”பதவி விலகும் தேதியைச் சொல்லுங்க..” பிரிட்டன் பிரதமருக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com