israel hamas warpt web
உலகம்
“ஒருநாள் உங்களையும் சுட்டு வீழ்த்துவார்கள்” - நெதன்யாகுவுக்கு துருக்கி அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை!
துருக்கி கல்வித்துறை துணை அமைச்சர் நசீப் இல்மாஸ், “ஒருநாள் நெதன்யாகுவையும் சுட்டு வீழ்த்துவார்கள்” என சர்ச்சைக்குரிய கருத்தொன்றை பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல் ஹமாஸ் போர் உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. இரு தரப்பில் இருந்தும் மேற்கொள்ளப்படும் மூர்க்கமான தாக்குதலால் அப்பாவி பொதுமக்களும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். போரில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
Nazif Yılmaz controversial tweetTwitter
இந்நிலையில் துருக்கி கல்வித்துறை துணை அமைச்சர் நசீப் இல்மாஸ், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை குறிப்பிட்டு “ஒருநாள் உங்களையும் சுட்டு வீழ்த்துவார்கள். அப்போது நீங்களும் இறப்பீர்கள்” என சர்ச்சைக்குரிய கருத்தொன்றை பதிவிட்டுள்ளார்.
இத்துடன் காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் குறித்த வீடியோவைப் பகிர்ந்து துருக்கி தன் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. இதுகுறித்தான முழு செய்தியை, கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.