\
Trump, Xi and Putin to Meet for First Time in History: Why?
Putin, Trump & Xi JinpingAI generated

3 வல்லரசுகள்.. வரலாற்றில் முதன்முறையாக ட்ரம்ப், ஜின்பிங், புதின் சந்திப்பு.. எதற்காக?

ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் இந்தச் சந்திப்பை உலக அமைதிக்கான ஒரு முக்கிய மைல்கல் என்று வரவேற்றுள்ளார்.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகிய மூவரும் முதன்முறையாகச் சந்திக்கவிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு உச்சிமாநாட்டின் முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய உலகின் மூன்று பெரும் வல்லரசுத் தலைவர்களும் ஒரே நேரத்தில், ஒன்றாகச் சந்திப்பது உலக ராஜதந்திர வரலாற்றில் இதுவரை நடந்திராத ஒரு புதிய மைல்கல் நிகழ்வாகும். நவம்பர் 19 அன்று சீனாவில், நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பை சர்வதேச ஊடகங்களும், ஐநா அமைப்பும் உலக அமைதிக்கான மிக முக்கிய வரலாற்றுத் தொடக்கமாகப் பார்க்கின்றன.

Russia and the United States have joined hands
putin, trumpReuters

சீனாவின் தென்பகுதியில் உள்ள முக்கிய தொழில்நுட்ப நகரமான ஷென்செனில் (Shenzhen) இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது. அங்கு நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டில் பங்கேற்று, மிக முக்கிய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார விஷயங்களைப் பற்றி விவாதிக்கச் சந்திக்கவுள்ளனர்

உலக அரசியலை மாற்றியமைக்கக்கூடிய இந்தச் சந்திப்பின் பின்னணியில் பல முக்கிய சர்வதேசக் காரணங்கள் விவாதிக்கப்படவுள்ளன:

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே இருந்த கடைசி அணுசக்தி கட்டுப்பாட்டு ஒப்பந்தமான 'நியூ ஸ்டார்ட்' (New START) கடந்த பிப்ரவரி மாதத்துடன் முடிவுக்கு வந்தது. இதனால் உலகின் மிகப்பெரிய இரு அணுசக்தி நாடுகளுக்கு இடையே எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.

XI & Putin
XI & PutinReuters

அதனால், அணு ஆயுதப் பெருக்கத்தைத் தடுக்க சீனாவையும் உள்ளடக்கிய ஒரு புதிய முத்தரப்பு ஒப்பந்தத்திற்கான அடித்தளத்தை அமைக்க டிரம்ப் விரும்புகிறார்.

ஆனால், தங்களின் அணு ஆயுதக் குவியல் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை விட மிகவும் சிறியது என்பதால், இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இணைவது தங்களுக்கு "நியாயமற்றது" என்று சீனா தொடர்ந்து கூறிவருகிறது. அமெரிக்காவும் ரஷ்யாவும் முதலில் தங்களின் ஆயுதங்களைக் குறைக்க வேண்டும் என்பது சீனாவின் நிபந்தனையாக இருந்து வருகிறது.

தற்போது மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரப் போர்ச் சூழல் மற்றும் ஈரான் விவகாரம் குறித்து மூன்று வல்லரசுத் தலைவர்களும் முக்கியமாக விவாதிக்கத் திட்டமிட்டுள்ளனர். வல்லரசுகளுக்கு இடையேயான உறவுகளில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது மற்றும் உலக அமைதியைப் பாதுகாப்பது குறித்து ஆழமான கருத்துப் பரிமாற்றங்கள் நடத்தப்படும் என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 António Guterres
António Guterresreuters

ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் இந்தச் சந்திப்பை உலக அமைதிக்கான ஒரு முக்கிய மைல்கல் என்று வரவேற்றுள்ளார். முக்கிய உலக நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து அணுசக்தி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினால், அதில் ஐ.நா. முழுமையாகப் பங்கேற்று, அந்த முயற்சி வெற்றி பெறுவதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Trump, Xi and Putin to Meet for First Time in History: Why?
ஈரானின் 'Dirty Bomb' திட்டம்.. அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை!!