\
Us intelligence warns of  Iran's dirty bomb plot
washingtonReuters

ஈரானின் 'Dirty Bomb' திட்டம்.. அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை!!

பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் மற்றும் நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட்,போன்ற முக்கிய அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறப்பட்டது.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ரசாயன ஆயுதம் அல்லது டர்ட்டி பாம் (Dirty Bomb) எனப்படும் கதிரியக்க வெடிகுண்டை வெடிக்க ஈரான் திட்டமிட்டு வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது. ட்ரம்ப் நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகளை குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக CNN செய்தி வெளியிட்டுளளது. அமெரிக்காவின் புதிய உளவுத்துறை தகவல்களை மேற்கோள் காட்டி இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.

Trump & Pete Hegseth
Trump & Pete Hegseth Reuters

இதுகுறித்து தகவல் அறிந்த அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், ஈரானின் திட்டத்தில் குறிப்பிட்ட இடங்கள் மற்றும் இலக்குகள் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அமெரிக்காவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், அமெரிக்காவின் உள்ளே தற்போது நம்பகமான அச்சுறுத்தல் எதுவும் இல்லை என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் லாரன் பிஸ் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, ஈரான் அமெரிக்க கடற்படை அதிகாரிகள் இருவருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் மற்றும் நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட்போன்ற முக்கிய அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் அதிபாதுகாப்பான ராணுவ முகாம்களில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

US minister under Iran's threat, moves to military base
trump & Scott Bessentreuters

Dirty Bomb என்றால் என்ன?

அணுகுண்டைப் போல அணுக்கரு பிளவு மூலம் செயல்படுவது அல்ல டர்ட்டி பாம். சாதாரண வெடிகுண்டுடன் கதிரியக்கப் பொருட்களைச் சேர்த்து வெடிக்கச் செய்யும் இந்த டர்ட்டி பாம். இது ஏற்படுத்தும் வெடிப்பினால் உயிரிழப்புகள் ஏற்படுவதுடன், கதிரியக்கப் பொருட்கள் காற்றில் பரவி பல கிலோமீட்டர் தூரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதனால், குறிப்பிட்ட பகுதிகள் மக்கள் வசிக்க முடியாத இடங்களாக மாறும் அபாயமும் உள்ளது.

அமெரிக்காவிற்குள்ளேயே வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருட்களைச் சேமித்து வைப்பது குறித்து ஈரானியர்கள் பேசியதாக உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல, அமெரிக்க அதிகாரிகள் மீது ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தும் அச்சுறுத்தலும் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, ரசாயன ஆயுதங்களை எந்தச் சூழலிலும் பயன்படுத்துவதை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

Us intelligence warns of  Iran's dirty bomb plot
ட்ரம்பைக் கொல்ல ஈரான் சதி? ராணுவ தளத்தில் தஞ்சமடைந்த அமெரிக்க அமைச்சர்கள்!