\
Donald Trump Says on Mojtaba Khamenei is 90% gone
ட்ரம்ப் - மொஜ்தபாPt web

ஒப்பந்தத்தில் இருந்து விலகிய ஈரான்... மிரட்டும் ட்ரம்ப்!

இருதரப்பினரும் ஒரு விரிவான தீர்வை நோக்கிச் செயல்படும் நோக்கில் 60 நாட்களுக்கு மோதலை இடைநிறுத்துவதையும் குறிக்கோளாக கொண்டு அமெரிக்காவும் ஈரானும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜூன் 17 ஆம் தேதி கையெழுத்திட்டது.
Published on

செய்தியாளர் ; M.மீரா

பிப்ரவரி 28 அன்று தொடங்கிய போரை நிரந்தரமாக நிறுத்துவதையும், இருதரப்பினரும் ஒரு விரிவான தீர்வை நோக்கிச் செயல்படும் நோக்கில் 60 நாட்களுக்கு மோதலை இடைநிறுத்துவதையும் குறிக்கோளாக கொண்டு அமெரிக்காவும் ஈரானும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜூன் 17 ஆம் தேதி கையெழுத்திட்டது.

Trump & Masoud Pezeshkian
Trump & Masoud Pezeshkianweb

இதற்கிடையே நடந்த சில மோதல்கள் காரணமாக ஒப்பந்தம் ரத்தானது என்று ஜூலை 8ஆம் தேதி ட்ரம்ப் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஈரான் - அமெரிக்கா போர் தீவிரமடைந்து வருகிற நிலையில் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். மேலும்  ஈரான் ஹார்முஸில் கடற்படை முற்றுகை தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஹார்முஸில் முற்றுகையை மீண்டும் தொடங்குவதற்கான அமெரிக்காவின் முடிவு, கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முற்றிலுமாகச் சிதைத்துவிட்டது. அதனால் ஜூன் 17 அன்று அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட அமைதிப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செல்லாதது எனக் கூறி, அதிலிருந்து விலகுவதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி - அதிபர் ட்ரம்ப்
ஹார்முஸ் ஜலசந்தி - அதிபர் ட்ரம்ப்web

இதற்கு பதிலளித்த அதிபர் ட்ரம்ப், ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால், நாங்கள் அவர்களுடைய எல்லா மின் நிலையங்களையும் செயலிழக்கச் செய்வோம். அவர்களுடைய எல்லாப் பாலங்களையும் தகர்ப்போம் என்றும் அடுத்த வாரம் அவர்களுக்கு நிலைமை மிகவும் மோசமாகப் போகும் என்று மிரட்டியுள்ளார்.

Donald Trump Says on Mojtaba Khamenei is 90% gone
இஸ்ரேலுக்காக உளவு பார்த்தாரா? வீட்டுக் காவலில் ஈரான் முன்னாள் அதிபர்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com