சீனா - அமெரிக்கா
சீனா - அமெரிக்காpt

’பதில் வரியை சீனா திரும்பப் பெறாவிட்டால் கூடுதலாக 50% வரி விதிப்போம்’ - எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!

தங்களுக்கு விதித்த பதில் வரியை சீனா திரும்பப்பெறாவிட்டால் அதற்கு கூடுதலாக 50% வரி விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
Published on

பல்வேறு நாடுகளுடனான அமெரிக்காவின் வணிகத்தை சமன் செய்யும் வகையில் பதில் வரி அறிவிப்பை ஏப்ரல் 2ஆம் தேதி ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.

இதை ஏற்காத சில நாடுகள் தாங்களும் அமெரிக்க பொருட்களுக்கு வரியை அதிகப்படுத்தின. சீனப்பொருட்களுக்கு ட்ரம்ப் 34% வரியை அதிகரித்த நிலையில் பதிலுக்கு சீனாவும் 34% வரி அதிகரிப்பு உத்தரவை வெளியிட்டுள்ளது. இதனால் ட்ரம்ப் கடும் கோபமடைந்துள்ளார்.

சீனா - அமெரிக்கா
ட்ரம்பின் பரஸ்பர வரிவிதிப்பு | ”வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும்” - சிங்கப்பூர் பிரதமர் கவலை!

தங்களுடனான வணிகத்தில் சீனா ஏற்கனவே பல தில்லுமுல்லுகளை செய்து வருவதாக குறிப்பிட்ட ட்ரம்ப், 34% வரியை சீனா இன்றைக்குள் திரும்பப்பெறாவிட்டால் நாளை மேலும் 50% வரி விதிக்கப்போவதாகவும் எச்சரித்துள்ளார். இதை ட்ரம்ப் செய்யும் பட்சத்தில் சீன பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கும் வரியின் மொத்த மதிப்பு 104% ஆக அதிகரிக்கும் நிலை ஏற்படும். மேலும், சீனாவுடனான வரி தொடர்பான சமரச பேச்சுகள் அனைத்தையும் கைவிட்டுவிடுவேன் என்றும் ட்ரம்ப் தன் ட்ரூத் சமூக தளத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்க சந்தை ஏறக்குறைய மூடப்படுவதன் விளைவாக சீன பொருட்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் குவியும் சூழலும் ஏற்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com