\
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்pt web

"இந்தியா என்னை 100% நம்பலாம்.. மோடியின் தீவிர ரசிகன் நான்.." - ட்ரம்ப் பேச்சு

இந்தியா தன்னை 100 சதவீதம் நம்பலாம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார்.
Published on
Summary

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற அமெரிக்க சுதந்திர தின விழாவில் தொலைபேசியில் உரையாற்றி, இந்தியா தன்னை 100 சதவீதம் நம்பலாம், அவர்கள் கேட்கும் எதையும் வழங்கத் தயார் என கூறினார். இந்தியாவை மிகவும் விரும்புவதாகவும், பிரதமர் மோடியின் தீவிர ரசிகன் எனவும் தெரிவித்தார். இருநாடுகளின் உறவு பல துறைகளில் வலுவடைகிறது என வலியுறுத்தப்பட்டது.

"இந்தியா என்னை 100 சதவீதம் நம்பலாம்; அவர்கள் எது கேட்டாலும் கிடைக்கும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற அமெரிக்க சுதந்திர தின விழாவில், அமெரிக்கத் தூதர் மூலமாக நேரடித் தொலைபேசி அழைப்பில் பேசிய அவர், தனக்கு இந்தியாவை மிகவும் பிடிக்கும் என்றும், தான் பிரதமர் மோடியின் தீவிர ரசிகன் என்றும் குறிப்பிட்டார்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடிPt web

இந்த விழாவில் நேரில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பேசுகையில், புதிய யுகத்தின் சவால்களை எதிர்கொள்வதில் இந்தியாவும் அமெரிக்காவும் மிகச்சிறந்த கூட்டாளிகளாகச் செயல்படமுடியும் எனத் தெரிவித்தார். இருநாடுகளின் கூட்டாண்மை வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் எனப் பல துறைகளில் வலுவாக முன்னேறி வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
ஈரான் ஒப்படைக்கும் நச்சுத்தன்மை கொண்ட யுரேனியம்.. இதை இடமாற்றம் செய்ய முடியுமா?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com