டிரம்ப்FB
உலகம்
இந்தியர்களுக்கு வேலைகொடுப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள் - Google, Microsoft-க்கு வலியுறுத்திய டிரம்ப்!
இந்தியர்களுக்கு வேலைகொடுப்பதை நிறுத்திக்கொண்டு அமெரிக்கர்களை பணியில் சேருங்கள் என கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
வாஷிங்டனில் ஏஐ வேலைவாய்ப்பு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ட்ரம்ப், அமெரிக்க நிறுவனங்கள் உள்நாட்டவருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்கே முக்கியத்துவம் தர வேண்டும் என அறிவுறுத்தினார், சீனாவில் தொழிற்சாலை அமைப்பதையும் இந்திய தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வேலையையும் அளிக்கும் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும் என கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற அமெரிக்க பெருநிறுவனங்களுக்கு ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.
அமெரிக்க அரசின் சலுகைகளை பெற்றுக்கொண்டு வெளிநாடுகளில் முதலீடு செய்யும் போக்கு தனது ஆட்சிக்காலத்தில் செல்லுபடியாகாது என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்க நிறுவனங்களில் பல லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ள நிலையில் ட்ரம்ப்பின் பேச்சு கவலை தருவதாக அமைந்துள்ளது