\
Trump Ocean: US President Trump wants to name an ocean after himself
TrumpReuters

‘டிரம்ப் ஓஷன்’ பெருங்கடலுக்கே பெயர் சூட்ட விரும்பும் டிரம்ப்.. அமெரிக்க அதிபரின் அடுத்த அதிரடி!

உலகின் மிகப்பெரிய பெருங்கடல்களில் ஒன்றான அட்லாண்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலுக்குத் தனது பெயரைச் சூட்டும் விருப்பத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிப்படுத்தியிருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
Published on: 

செய்தியாளர் - ராஜ்குமார். ர

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் என்றாலே அரசியல் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றது முதல் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கு சில நாடுகள் ஆதரவும், சில நாடுகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், புவியியல் இடங்களுக்குப் புதிய பெயர்களைச் சூட்டும் நடவடிக்கைகளில் டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மெக்சிகோ வளைகுடாவை ‘அமெரிக்கா வளைகுடா’ எனவும், கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே அமைந்துள்ள ஒன்டாரியோ ஏரியை ‘லேக் அமெரிக்கா’ எனவும் பெயர் மாற்றுவதற்கான நடவடிக்கைகளை டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டது. இவ்வாறு அடுத்தடுத்து புவியியல் இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வரும் நிலையில், தற்போது பெருங்கடலின் பெயரையும் மாற்றுவது குறித்த யோசனையை டிரம்ப் முன்வைத்துள்ளார்.

Where is Mojtaba Khamenei? Trump slams Iran over its leadership crisis
donald trumpreuters

அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலை முன்னிட்டு, டென்னசி மாகாணத்தின் கிளார்க்ஸ்வில்லில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய டிரம்ப், ஏற்கெனவே ஒரு வளைகுடாவுக்கும் ஓர் ஏரிக்கும் பெயர் மாற்றப்பட்டுள்ள நிலையில், இனி ஓர் ஆற்றுக்கும் ஒரு பெருங்கடலுக்கும் பெயர் மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதுகுறித்துப் பேசிய அவர், அட்லாண்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலில் ஏதேனும் ஒன்றுக்கு ‘டிரம்ப் பெருங்கடல்’ அல்லது ‘அமெரிக்கக் கண்டங்களின் பெருங்கடல்’ எனப் பெயர் வைக்கலாம் என்று தெரிவித்தார். மேலும், தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாக ஒரு பெருங்கடலுக்கும் ஒரு பெரிய ஆற்றுக்கும் புதிய பெயர்களைச் சூட்ட வேண்டும் என்ற விருப்பத்தையும் டிரம்ப் வெளிப்படுத்தியுள்ளார்.

ஏற்கெனவே மெக்சிகோ வளைகுடா மற்றும் ஒன்டாரியோ ஏரி ஆகியவற்றின் பெயர்களை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள டிரம்ப், தற்போது உலகின் முக்கியமான பெருங்கடல்களில் ஒன்றின் பெயரையும் மாற்றுவது குறித்துப் பேசியிருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Trump Ocean: US President Trump wants to name an ocean after himself
ஏர்போர்ட் மீது ஏவுகணைத் தாக்குதல்.. தொடரும் ஹவுதியின் 'Attack' பதிலடிக்கு தயாராகும் சவுதி?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com