எலான் மஸ்க்  - ட்ரம்ப்
எலான் மஸ்க் - ட்ரம்ப்முகநூல்

எலான் மஸ்க்கிற்கு கூடுதல் அதிகாரம் அளித்த ட்ரம்ப்!

உலகின் நம்பர் ஒன் பணக்காரரும் பிரபல தொழிலதிபருமான எலான்மஸ்க், அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பின் வெற்றிக்கு பெரிதும் துணை நின்றார்.
Published on

எலான் மஸ்க்கிற்கு அதிபர் ட்ரம்ப் கூடுதல் அதிகாரங்களை அளித்துள்ளது அமெரிக்க மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.

உலகின் நம்பர் ஒன் பணக்காரரும் பிரபல தொழிலதிபருமான எலான்மஸ்க், அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பின் வெற்றிக்கு பெரிதும் துணை நின்றார்.தேர்தல் வெற்றிக்குப்பின் அமெரிக்கஅரசின் நிர்வாகத்தை முற்றிலும் சீர்திருத்தும் புதிய அமைப்பிற்கு தலைவராக எலான் மஸ்க்கை ட்ரம்ப் நியமித்துள்ளார்.

அமெரிக்காவில் அரசு உயரதிகாரிகளில் இருந்து கடைநிலை ஊழியர்கள் வரையை வேலையை விட்டுஅனுப்புவதில் இருந்து இருந்து பழைய நடைமுறைகளை ரத்து செய்வது வரை மஸ்க்கின் செயல்பாடுகள் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. அரசின் செயல்பாடுகளை எதிர்த்து அமெரிக்காவில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

எலான் மஸ்க்  - ட்ரம்ப்
அமெரிக்கா உடன் மோதல் | "டெஸ்லா கார்கள் மீது 100% வரி விதிக்கப்படும்" - கனடா எம்பி காட்டம்

மஸ்க்கை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி விடுங்கள் என அதில் ஒரு பதாகையில் எழுதப்பட்டிருந்தது. இந்த எதிர்ப்புகளை புறந்தள்ளி மஸ்க்குக்கு கூடுதல் அதிகாரங்களை தரும் அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து வெள்ளை மாளிகையில் ட்ரம்ப்புக்கு சமமாக அமர்ந்து பேசிய எலான் மஸ்க் தன் செயல்களை நியாயப்படுத்தினார். இந்த நடவடிக்கைகளுக்காகத்தான் மக்கள் தங்களுக்கு வாக்களித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

எலான் மஸ்க்  - ட்ரம்ப்
2030-ல் திட்டம் | நிலவுக்கு செல்லும் வீரரின் உடை.. அறிமுகப்படுத்திய சீனா!

மஸ்க் ஏற்கெனவே எடுத்தபெரும்பாலான நடவடிக்கைகள் சட்டவிதிகளை தாண்டி எடுக்கப்பட்டுள்ளநிலையில் பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவருக்கு கிடைத்துள்ள அதிகாரங்கள் இன்னும் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துமோ என்ற அச்சம் அமெரிக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ட்ரம்ப்பிடம் இருந்து அதிகாரங்கள் எலான் மஸ்க்கிற்கு கை மாறுகிறதா என்ற ரீதியிலும் அமெரிக்காவில் கேள்விகள் எழுந்துள்ளன. அதிபர் மட்டுமே பேட்டியளிக்கும் வெள்ளை மாளிகையில் இருந்து மஸ்க்பேட்டியளித்த நிலையில் பிரசிடென்ட் மஸ்க் என்றே ஆன்லைனில் ட்ரென்ட் ஆவதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com