china reveals name of moon landing spacesuit
chinax page

2030-ல் திட்டம் | நிலவுக்கு செல்லும் வீரரின் உடை.. அறிமுகப்படுத்திய சீனா!

சீனா, நிலவுக்கு செல்லும் மனிதன் அணியக்கூடிய உடையை அந்நாட்டு விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது.
Published on

சீனா விரைவில் மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்நிலையில் நிலவுக்கு செல்லும் மனிதன் அணியக்கூடிய உடையை அந்நாட்டு விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது. இந்த உடைக்கு வாங் யு என பெயரிடப்பட்டுள்ளது, நிலவில் மனிதன் அமர்ந்து செல்லும் வாகனமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டான்சுவோ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது, 9 ஆயிரம் பேரிடம் கருத்துகள் பெற்று இந்த பெயர்கள் சூட்டப்பட்டதாக சீன விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

china reveals name of moon landing spacesuit
சீனாஎக்ஸ் தளம்

பாலைவனத்தில் நிலவை போன்ற தன்மையை செயற்கையாக உருவாக்கி அங்கு இவ்வாகனம் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, நிலவுக்கு மனிதனை அனுப்பும் ராக்கெட்டும் கடந்த ஆண்டு சோதித்துப் பார்க்கப்பட்டது.

2030ஆம் ஆண்டில் சீனர் ஒருவர் நிலவுக்கு செல்ல உள்ள நிலையில் அங்கு மனித வாழ்க்கைக்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

china reveals name of moon landing spacesuit
பனாமா கால்வாய் விவகாரம் | அமெரிக்கா மீது சீனா குற்றச்சாட்டு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com