\
Trump & Pete Hegseth
Trump & Pete Hegseth Reuters

கசிந்த ஈரான் போர் ரகசியம் ? அமெரிக்க ராணுவத்தில் வெடித்த அதிரடிப் புயல்!

பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஜெனரல்: ஈரான் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் தகவல் கசிவு விவகாரம்!
Published on: 

செய்தியாளர் - M.மீரா

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் பெரிய அளவில் தாக்குதல் நடத்துவது குறித்து ஆலோசித்து வரும் நிலையில், ராணுவத்தின் முக்கிய உயர் அதிகாரி ஒருவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஈரான் போர் மற்றும் ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பான ரகசியத் தகவல்களை வெளியிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதே இதற்குக் காரணம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன இது குறித்த முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

ஈரான் போர் ரகசியங்களை கசியவிட்டதாகக் கூறி அமெரிக்காவின் முதன்மை ராணுவ உத்தி வகுப்பாளரை (Top Military Planner) பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளார்.

Pete Hegseth
Pete Hegseth Reuters

அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் மிக முக்கியப் பொறுப்பான, கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரிகளின் (Joint Chiefs of Staff) உத்தி, திட்டமிடல் மற்றும் கொள்கைக்கான (J5) இயக்குநராக இருந்தவர் லெப்டினன்ட் ஜெனரல் பிரெட் சில்வியா (Lt. Gen. Brett Sylvia). ஈரான் போர் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பான ரகசியத் தகவல்களை ஊடகங்களுக்கு கசியவிட்டதாக (Leak) இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரணை நடத்திய பாதுகாப்பு அதிகாரிகள், ரகசியத் தகவல்களைப் பகிர்ந்தது தொடர்பான மூன்று 'பாலிகிராஃப்' (Polygraph - பொய் கண்டறியும் சோதனை) சோதனைகளில் ஜெனரல் பிரெட் சில்வியா தோல்வியடைந்ததாகத் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்சேத் அவரை பதவியிலிருந்து நீக்கியுள்ளார். இந்த விவகாரம் தற்போது விசாரணைக்காக அமெரிக்க நீதித்துறையின் (Department of Justice) பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சில்வியா 32 ஆண்டுகள் ராணுவத்தில் சிறப்பாக சேவை ஆற்றியவர் .

donald trump
donald trumpreuters

அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிரான போரில் அடுத்தகட்ட பெரிய அளவிலான ராணுவத் தாக்குதல்களைத் தொடுப்பது குறித்து ஆலோசித்து வரும் மிக முக்கியமான காலகட்டத்தில் இந்த பணி நீக்கம் நடந்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தல் (Midterm Elections) முடிந்தவுடன் ஈரானில் புதிய வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று பிராந்திய நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.

பீட் ஹெக்செத் கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வரும் தீவிரப் பணிநீக்க நடவடிக்கைகளின் (Purge) தொடர்ச்சியாகவே இந்த அதிரடி மாற்றமும் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பீட் ஹெக்செத் பாதுகாப்பு செய்லாளர் பதவி ஏற்ற பின் 21 உயர்பதவி ராணுவ, சிவில் அதிகாரிகள் நீக்கக் செய்யப்பட்டுள்ளனர் அல்லது வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஈரான் போரின் நடுவே மூத்த உத்தி வகுப்பாளர்கள் இவ்வாறு அடுத்தடுத்து நீக்கப்படுவது அமெரிக்காவின் ராணுவத் திட்டமிடலைப் பாதிக்கலாம் என எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சித்துள்ளனர்.

Trump & Pete Hegseth
ஆழம் தெரியாமல் காலை வைத்த ட்ரம்ப்.. ஈரான் மீது தாக்குதல்.. 47 பில்லியனைக் கடந்த செலவு!